60
சிறுகதைகள்
‘அய்யோ, இதெல்லாம் கூடாது, எனக்குப் பிடிக்காது’ என்று சொல்லிவிட்டு, தட்டிக் கழித்து விட எண்ணி வாயைத் திறந்தவள், ஏனோ தெரியவில்லை “யாராவது பார்த்து விடுவார்கள்!” என்று நாணிக் கோணி நகர்ந்தாள் இந்த வார்த்தை போதாதா, அய்யருக்கு!
“எல்லாப் பசங்களும் பரத நாட்டியம் பார்த்துண்டு இருக்கான். ஒருத்தனும் வரமாட்டான்; பயப்படாதே” என்று சொல்லி அய்யர் அவளை எட்டிப்பிடித்தார் அவள் கன்னம் சிவந்தது. அவரது கையிலே தன்னை ஒப்படைத்தாள். திடீரென்று நாராயணிக்கு ஞானோதயம் ஆயிற்று. அய்யரின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “சுவாமி! என்னைக் காப்பாற்றுங்கள். நீங்கள்தான் எனக்குத் துணை!” யென்று ‘ஓ’வென அலறினாள்.
அய்யர் அவளை வாரியெடுத்துத் தாவியணைத்து தைரியம் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவளும் ஆண்டவன் அருள்பாலித்து விட்டான் என்ற நம்பிக்கையோடு, வீட்டுக்குப் புறப்பட்டாள். அய்யரும், அந்தத் தையலின் கன்னத்தைச் சுவைத்த உதடுகளை கழுவாமலே ஆண்டவனுக்கு அர்ச்சனை மந்திரம் ஜெபிக்கக் கர்பக்கிரகம் நோக்கி விரைந்தார்.
கோயில் பிரகாரத்திலே வாக்களித்த பிரகாரம் அய்யர் நாராயணியை எப்போதும் வைத்துக்காப்பாற்றுகிற அளவுக்கு அவள் வீட்டிற்கே வந்து சேர்ந்தார்.
“கோயில் குருக்களுக்கு அடிச்சுதடா சான்ஸ்! கொய்யாப் பழமாக இருந்தாள், அவளைக் கொய்து விட்டார் அய்யர். என்ன இருந்தாலும் அனுபவிக்கப் பிறந்த ஜாதியப்பா அது! எத்தனையோ பேர் நத்திக் கிடந்தார்கள்; எல்லோரையும் எட்டி உதைத்துவிட்டு பூணூல் வலையிலே