உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

95


உன் குடும்பப் படத்தை அனுப்பி வை! அரும்பு ஒன்று தானே! ஒருவேளை ஐந்தாறோ?

இதைப் படிக்கும்போது நீ எப்படிக் கோபிக்கிறாய் என்பது எனக்குத் தெரியாமலில்லை. திருமணத்திற்கு வராதவன்; வராதது மட்டுமல்ல, இத்தனை நாள் இருக்கிறேனா, செத்தேனா என்றுகூட விசாரிக்காதவன் இன்று அவன் ஒரு கட்டையைக் கட்டிக்கொண்டதும் மிகக் குடும்பப் பொறுப்பும், நட்புணர்வும் வந்தவனைப் போல நடிக்கிறானே என்றெல்லாம் உன் முரட்டு உதடுகள் முணுமுணுப்பது என் காதில் விழாமல் இல்லை. நீ போன முறை சென்னை வந்தபோது நான் இலங்கை போயிருந்தேன். நீ வந்திருக்கிறாய் என்று கேள்விப்பட்டதும், என் வேலைகளைக் கூட அவசர அவசரமாக முடித்துக்கொண்டு இலங்கையிலிருந்து ஓடோடி வந்தேன்.

நீ அதற்குள் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிகளைப் பார்த்துப் பயந்து ஓடோடி விட்டாயாம் டெல்லிக்கு! உடனே கடிதம் எழுதினேன். உன் வீரத்தைப் புகழ்ந்து நான் எழுதிய அந்த மடல், புறநானூற்றுப் பாடல்களின் வரிசையிலே சேர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதை நீ தவற விட்டிருந்தால் தயவு செய்து உன் பழைய குப்பைகளைக் கிளறிப் பார்.

“கலியாணமே கூடாது!
அது ஒரு கால் விலங்கு!
மனித உரிமைகளைப் பறிக்கும் சிறை!
மகிழ்ச்சிக்குப் பூட்டு!
மரணலோகச் சீட்டு!”

என்றெல்லாம் வெறுப்புடன் பேசிக் கொண்டிருந்த உன் ஆருயிர் நண்பனாகிய நான், மனந்திருந்திக் கலியாண வாசற்படியில் கால்வைத்து, குடும்பமெனும்முடிந்தது