புதையல் 17 ஆட்களை வெள்ளியம்பலத்திற்கு நிலைகொள்ளவில்லை. இந்தப் பிரச்சினைக்கு சீக்கிரம் ஒரு முடிவு கட்டினால் தான் தன் னுடைய பொன் தோண்டும் காரியம் விரைவில் நடை பெற முடியும் என்ற தீர்மானத்திற்கு வந்தார். ஆட்கள் அனை வரையும் அழைத்து கூச்சலிடச் செய்து, அவர்களை விரட்டி விடலாம் என்று முடிவு செய்தார். அழைப்பதற்காக ஒரு அடி எடுத்து வைத்தார். வென ஒரு சிறு சப்தம் - அம்பலம் திடுக்கிட்டுப் பார்த்தார். ஒன்றுமில்லை. தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு வளவாலிடம் இன் னாரு வௌவால் நெருங்கியதால் வந்த வினை; அவ்வளவு தான் துடித்துக் கொண்டிருக்கும் இருதயத்தை அழுத்தியவாறு மீண்டும் நடக்க ஆரம் பித்தார். 177 பட பட சற்று பலமாகவே பேச்சுக் குரல் கேட்டது. அம்பலம் தொடர்ந்து நடக்காமல் நின்று விட்டார். கள் - அத்தான் நடந்ததை யெல்லாம் மறந்து விடுங் இனிமேலாவது....... >> - அவ்வளவு தான் அவர் காதில் விழுந்தது-அதற்குமேல் பேசியது சரியாகக் கேட்கவில்லை. இனி ஆட்களை இழுத்து வந்து கலாட்டா செய்ய வேண்டியது தான் என்று எண் ணியபடி வேகமாக வெளியேறினார் அம்பலம். ஆட்களை அழைத்து வந்து கலவரம் செய்தால் அதனால் ஏதாவது விபரீதம் ஏற்பட்டு ஊர் கூடிவிட்டால் பிறகு, தான் நினைத்தபடி தங்கம் வெட்டி யெடுக்கும் காரியம் நடக்காமல் போய் விடுமே, ஜோசியர் கூறிய நாளைத் தவற விட்டு விட் டால், மறுபடியும் இப்படி ஒரு நாள் கிடைக்காதே த-என் றும் யோசிக்கத் தொடங்கினார். சரி சரி - தானே போய் அவர் களை மிரட்டி விரட்டுவது – என்றும் முடிவு செய்து கொண்டு மறுபடியும் கோயிலுக்குள் திரும்பினார்.
பக்கம்:புதையல்.pdf/19
Appearance