உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதையல்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 - மு. கருணாநிதி குமாரவடிவு கொலைகாரனாக சிறைக்குள்ளே நுழைந் தான் - ஞானி போல வெளியே வந்தான்." "என்ன சொல்லுகிறீர்கள்? அப்படியானால் தாங் கள்...." என்று ஆவல் நிறைந்த குரலில் இழுத்தாற் போலக் கேட்டான் துரை. 66 குமாரவடிவு, மனைவியைக் கொலை செய்ததற்காக குற்றஞ் சாட்டப்பட்டான். வள்ளிக் கிழங்கை வெட்ட வேண்டுமென்று எழுதப்பட்டிருந்த டைரிக் குறிப்பு அவ னைக் கைதியாக்கியது. அவனைப் பற்றி உனக்குத் - - ள தெரிந்த கதைகள் முழுவதையும் என்னிடம் சொல்லிவிட் டாய். அவன் சிறகொடிந்த பறவைபோல கூட்டுக்குள்ளே அடைபட்டுத் தவித்தபோது, பறவைக் குஞ்சுகள் வெளி யிலே பாதகர்களால் வேட்டையாடப்பட்ட பயங்கரச் சம்ப வங்கள் அவனுக்குத் தெரியாது. ஆயுள் தண்டனை அடைந்த கைதி குமாரவடிவு உனக்குத் தெரியுமோ என்னவோ சிறைச் சாலை விதிப்படி, ஆயுள் தண்டனை என்பது சாகும் வரையிலே சிறையிலே கிடப்பது என்ப தல்ல என்ற விஷயம்! ஆமாம் துரை; சாகும் வரையிலே இருக்கவேண்டிய அவசியமில்லை. முழுவதும் சாவதற்கு முன்பு அந்தக் கைதிகளுக்கு நிச்சயம் விடுதலை உண்டு. கைதியின் நடத்தைக்குத் தக்கவாறு நாட் குறைப்பு- கடைசியாக 'போர்டு' என்று ஒன்று கூடி, அதிலே ஓரிரு வருடங்கள் தள்ளுபடி ஆண்டு தோறும் உள்ள வி விடு முறைக் கணக்கு ஆகிய இந்த வகைகளிலே ஏழெட்டு ஆண்டுகள் தண்டனை குறைக்கப்பட்டு, ஆயுள் தண்டனை அடைந்த கைதிகள் பத்து பனிரெண்டு வருடங்களில் விடு தலை பெற இயலும். அது போலத்தான் குமாரவடிவும் விடுதலை பெற்றான். சிறைச்சாலையிலேயிருந்து அவன் வெளியிலே வரும்போது ஏறத்தாழ உனக்கு இருபது அல் லது இருபத்திரண்டு வயதாகியிருந்திருக்கலாம். வெளி - - டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/208&oldid=1719474" இலிருந்து மீள்விக்கப்பட்டது