________________
உள்ளத்தில் உள்ளதை ஒளிக்காமல்...! என் இனிய நண்பரே! ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் அமெரிக் காவில் புருக்லின் மருத்துவமனையில் இருக்கும் உங்க ளுக்கு இந்தக் கடிதம் கிடைப்பதற்கு வழியில்லை என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களைத் தங்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டு எந்த வொரு பதவியோ, லாபமோ பெறாமல்-பெறுவதற்கும் விரும்பாமல் - லாரிகளில் ஏறி வந்து உங்களை வாழ்த்தியும் வாழ்த்தி விட்டுத் திரும்பச் செல்லும்போது அந்த லாரி கள் சில விபத்துக்குள்ளான காரணத்தால் அடிபட்டு கால் கை ஒடிந்த போதும்கூட அதைப்பற்றிக் கவலைப் படாமல் தங்களைக் கண்ட மகிழ்ச்சியில் வலியையே மறந்தும் உங்கள்பால் பாசத்தால் கட்டுண்டு கிடக்கும் அ.தி.மு.க. உடன்பிறப்புக்கள் இந்தக் கடிதத்தைப் படிக்கும்போது, நீங்களே இதனைப் படித்ததாக நான் எண்ணிக் கொள்வேன். நான் இப்போது சொல்வதும் எழுதுவதும் அ.தி.மு.க. உடன்பிறப்புக்கள் பல பேருக்கு நம்ப முடியாததாக இருக்கலாம். காரணம் ; தலைவனுக்கு இப்படியொரு துன்பமா என எண்ணிப் பார்க்கக்கூட அவர்கள் இதயம் இடந்தராது என்பதால் நான் சொல்வதை அவர்களால் நம்ப முடியாது! ஆனால் உங்கள் நிலை எனக்கு நன்றாகத் தெரியும் போது - அந்த உண்மையை மறைத்துவிட்டு + உங்களை வைத்து அரசியல் விளையாட்டு நடத்துவதற்காக- உங்களைச் சித்ரவதை செய்து கொண்டிருக்கிறார்களே; உங்களைச் சுற்றியிருந்து உல்லாசம் அனுபவித்த சில