உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய ஒலி, மு. கருணாநிதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நண்பர்கள் - அவர்கள் உங்களை படுத்தும்பாட்டை என்னால் சகித்துக்கொள்ள முடியாத நிலையில்தான் இதனை எழுதுகிறேன். இன்றைக்கு நான் சொல்வது கேட்டு திகைத்திடும் உங்களது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள்; எதிர் காலத்தில் நிச்சயமாக இந்தக் கருணாநிதி சொன்னது உண்மைதான் என்பதை உணர்ந்து கொள்ளத்தான் போகிறார்கள். தங்களை உண்மையிலேயே ஏமாற்றிப் பொய்கூறி,புனைந்துரைத்து, போலி நாடகமாடியவர்கள் யார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்போது அவர்களது ஆத்திர எரிமலைக்கு முன்னால் அந்த சுயநலப் பதர்கள் பொசுங்கித்தான் போவார்கள்! மாவட்டத்தில் லட்ச ரூபாய் பெரியார் ஒரு அக்டோபர் 15ந் தேதி நிகழ்ச்சிகளில் தேர்தல் நிதி தருவ தாக இருந்ததை ரத்து செய்துவிட்டு இரவெல்லாம் விழித் திருந்து தங்களைக் காண்பதற்காக சென்னை அப்போலா மருத்துவமனை நோக்கி ஓடோடி வந்தேன். ஆனால்...ஆனால்... உங்களைக் காண எனக்கு அனுமதி மறுத்துவிட்டார்கள். அப்படியொரு போலீஸ் ராஜ்யம்! நாற்பதாண்டு காலம் பழகிய நண்பனாகிய எனக்கு ஏற்பட்ட கதி அது! தொலைவில் நின்றாவது கதவு ஓரத்தில் எட்டிப்பார்த்தாவது பார்த்துவிட்டுப்போகிறேன். என்றேன்! அனுமதி கிடைக்கவில்லை. நண்பரே! கழகக் கட்டுப்பாட்டை மீறி என்னதான் பேசியிருந் தாலும்- அவருடன் தனியாகப் பேசி அதன் பிறகு முடி வெடுக்கலாம் என்று செயற்குழு உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே-"அவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்" என்று எனக்கும் தெரியாமல் பத்தி ரிகைகளுக்குக் கையெழுத்திட்டுச் செய்தி அனுப்பிய நாவலர் உங்களைப் பார்க்கவும் முடிந்தது! உங்கள் உடல் நலிவையே தனக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகக் கருதி பயனடையவும் முடிகிறது! இடைக் காலத்தில் அடைகிற பயன் போதாதென்று தொடர்ந்து பயனடைய உங்கள் வாடியிருக்கும் உடலை வாணிபப் பொருளாக மாற்றிக் கொள்ளவும் முடிகிறது! 25