உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய ஒலி, மு. கருணாநிதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 அரசியல் சட்டத்தையே வளைத்தும் நெளித்தும் உங்களுக்குள்ள உரிமையை மறுத்து விட்டு அவர் களாகவே கூடி “அசெம்பிளி"யையே கலைத்து விட்டு, அவர்கள் அமைச்சர்களாகத் தொடருகிறார்கள்! ஆக்டிங் சீப்மினிஸ்டர்" என்று அரசியல் சட்டத் திலேயே இல்லை! அப்படியும் தங்களை அழைக்கச் செய்து ஆசையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்! இதோடு உங்களைப் பயன்படுத்தி அதோடு விட்டா லும் பரவாயில்லை! உங்களை ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப் போகிறார்களாம்! அப்படி நீங்கள் ஆண்டிப்பட்டி தொகுதியில் இந்த உடல் நிலையோடு நிற்பதற்கு நீங்களே உண்மையில் விரும்பினால் -அந்தத் தொகுதியில் கழகம் தங்களுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தக் கூடத் தயாராக இல்லை! உங்களுக்கு அந்தத் தொகுதியைக் கழகம் விட்டுக் கொடுப்பதாக நான் பெருமை பேசவில்லை! எதிர்ப்பு என்கிற அந்தத் தொல்லையைக் கூடத் தங்களுக்கு இந்த நிலையில் நான் தருவதற்கு விரும்பமாட்டேன்! ஆனால் என்னென்ன செய்திகள் வருகின்றன! வேட்பு மனு தாக்கல் செய்ய உங்களால் கையெழுத் துப் போட முடியாதாம்! அதனால் இடது கை விரலை எழுதுவதற்குப் பயிற்சி தருகிறார்களாம்! உங்களின் ரேகை வாங்கப் போகிறார்களாம்! கை இந்த ஏழாண்டு கால ஆட்சியில் எத்தனை ஆயிரம் கோப்புகளில் உங்கள் கையெழுத்தை இட்டிருக்கிறீர் கள் - அப்படிப்பட்ட உங்களிடம் கைரேகை பதிய வைக்கிற காரியத்தை நடத்தப் போகிறார்கள்! என்றால் இவர்களுக்கு இதயமென ஒன்று இருக்கிறதா? உறுதி வேட்பு மனு தாக்கல் செய்யும்போது மொழியை அதிகாரி முன்னிலையில் படிக்க வேண்டுமே! அதற்காக இப்போதே பொய் சொல்லத் தொடங்கி விட்டார்கள்: நீங்கள் பேச முயற்சிப்பதாக!