உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். விழையப்படுத்தற்குக் கருவித்தன்மையாகிய இலிங்கமுடைய தொ ழில் முற்றுப்பெறுமென்னும் ஞானமும், நித்தவிதிக்கண் விதித்தகால த்து நிகழற்பாற்று என்னும் ஞானமும், நைமித்திகத்தின்கண் நிமி த்தவுணர்வாற் றோன்றும் ஞானமுமே முயறலைத் தோற்றுவிப்பதா கலின். குருமதத்தார் விசேடணத்தையுடையதன் றன்மையின் ம நினைவாற் றோன்று ஞானம் உடனிகழுமாகலான், உடனிகழ்ச்சி யுண்டென்பர். அது பொருந்தாது, தொழிலான் முற்றுப்பெறும் விழையப்படுவதற்கேதுவை உணருஞானமே இச்சை வாயிலாக முயற்சியைப் பிறப்பிக்குமெனச் சுருங்கக்காட்டலாற் கொள்ளற் பாற்றாகலின். அற்றேல், நித்தவிதி விழையப்படும் பலத்துக்குக் கருவியன்மையின், ஆண்டு முயற்சிசெல்லாமை வரப்பெறுமெ னின்;- அற்றன்று, நித்தவிதிக்கண்ணும் விதித்தன செய்யாமை யான் வருங்குற்றங் களைதலாதல் பாவக்கேடாதல் பலமெனக் கொள்ளற்பாற்றாகலின். இதனானே தொழிலான் முற்றுப்பெறும் விழையப்படுதற் கேதுவாதற் றன்மையே வியங்கோள் விகுதிக்குப் பொருளெனக்கொள்க. அற்றேல், "துறக்கம் விழைவோன் சோ திட்டோமத்தான் வேட்க" என்புழிக் ககரவிகுதியாற் றுறக்கத்திற் கேதுவாகிய காரிய நிகழ்ச்சி யுணரப்படும். அக்காரியம் வேள்வி யெனின் அது விரையக் கெடுவதாகலான் எதிர்காலத்தின் வரக் கடவதாய துறக்கத்திற்கே துவாதல் கூடாமையின், அதற்குத் தகு தியாகிய நிலைபெற்ற காரியமாகிய அபூர்வமே விகுதிப்பொரு ளெனக் கோடற்பாற்று. காரியம் செய்கையான் முற்றுப்பெறும். செய்கை செயப்படுபொருளுடைத்தாகலால் 'செயப்படுபொருள் யாது' என்னும் அவாய்நிலைக்கண் வேட்டல் செயப்படுபொருளாய் முடிவுபெறும். 'எவனுடைய காரியம்' என ஏவப்படுவா னவாய்நிலைக் கண் துறக்கம் விழைவோன்' என்னும் பதம் ஏவப்படுவான் மேற் f