உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

துன்பக் கேணி 11 திரண்டது. களவு விவரமும் பரவியது. வெள்ளையனை இரவு வெகு நேரம் வரை கள்ளுக்கடையில் பார்த்ததாகப் பலர் சொன்னார்கள். ஆள் பிறகு என்ன? மருதி எவ்வளவு கூச்சல் போட்டும் பயனில்லை. வெள்ளையன் பனங்காட்டில் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்ததைக் கண்டுகொண்டார்கள். பிடிபட்டவுடன், அவன் உண்மையில் திருடாமல் இருந் தாலும் என்ன? போலீஸ் விஷயம் வெகு எளிதில் கேசாக மாறி வெள்ளையன் சிறைக்குச் சென்றான். அவன் சிறை செல்லுமட்டும் ஊர் அல்லோலகல்லோ லம்தான். முடிவில்லாமல், சளைக்காமல், பேசுவதற்குச் சமாசாரங்கள் நிறைந்திருந்தன. பண்ணைப் பிள்ளையவர் கள் என்ன முட்டிக்கொண்டும் மாடுகள் வந்தபாடில்லை. அதற்காக வெள்ளையன் பயலைச் சும்மா விடுகிறதா? ஏமாற்றிய பணத்திற்காவது அங்கு போய்விட்டு வரட்டுமே என்பதுதான் அவருடைய வாதம். மாதம் இந்தக் களேபரக் காலத்தில் மருதிக்கு இரண்டு அவளைப் பொறுத்தவரை, சேரியில் கிடைக்கும் சௌகரியங்களுக்குத் தகுந்தவாறு, வெள்ளையனுடன் 'கண்ணாலம்' செய்துகொள்ளும்பொழுது வாழ்க்கை இன்ப கரமாகத்தான் ஆரம்பித்தது. புது மாப்பிள்ளை என்ற உற் சாகத்தில் அவன் வண்டியும் மாடும் வாங்கி இக்கோலமா கும் என்றிருந்தால், அவள் என்ன செய்யமுடியும்? வெள்ளை யன்மீது அவளுக்கு அளவுகடந்த பிரியந்தான். இருவரும் கள்ளைக் குடித்துவிட்டு அடிக்கடி சச்சரவிட்டுக் கொண்டாலும். சேரியின் திருஷ்டி தோஷத்தைப் பெற்றிருப்பார்கள். எப்படியோ வெள்ளையன் சிறை சென்றான். மருதி அப்பன் வீடு சென்றாள். பிள்ளையவர் களுக்கு ஏச்சும் இரைச்சலுந்தான் மிச்சம். ஆனால், வெள்ளையன் சிறைக்குப் போனதில் பணத்திற்குப் பதிலாக ஒரு திருப்தி. . . எங்கு பார்த்தாலும் பணமுடையாகவும் நிலங்கள் தீய்ந்துபோயும் இருக்கும் காலத்தில், அப்பன் வீடானா லும், அன்பையும் ஆதரவையும் தவிர வேறு என்ன கிடைக்கப்போகிறது, அதிலும் ஏழைப் பறையனாக