உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

துன்பக் கேணி 39 இருவரும் நேரே மருதியின் குடிசைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். மருதிக்கு, அவர்கள் செய்தியைக் கேட்டதும், பேரிடி விழுந்ததுபோல் ஆயிற்று. அதிலும், தன்னைக் கெடுத்த பாவியின் கையாள்தான் மருமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தச் சின்னான். குய்யோ முறையோ வென்று கூவிக்கொண்டு, ஸ்டோர் மானேஜர் பங்களாவிற்கு ஓடினாள். அவர் அப்பொழுது தான் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து நின்றுகொண்டிருந் தார். பக்கத்தில் மரகதமும், தாமோதரனும் நின்றுகொண் டிருந்தார்கள். ஓடிவந்த மருதி,"என்னைக் கெடுத்த பாவி, என் மகளை யும் குலைத்தாயே!" என்று ஒரு கல்லைத் தூக்கி, அவர்மீது போட்டாள். நெற்றிப் பொருத்தில் பட்டு உயிரைப் பறித்துச் சென்றது கல்! தாமோதரன் மருதியை ஓங்கி யடித்தான். அவள் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டாள். மரகதம் தகப்பனார்மீது விழுந்து கதறினாள். வேலைக் காரர்கள் வந்து கிழவரை உள்ளே எடுத்துச் சென்றார்கள். இதற்குள் நடந்த விஷயம் கூலிக்காரர்களுக்குள் பரவி விட்டது. அவர்கள் எல்லோரும், கம்பையும் தடியையும் எடுத்துக் கொண்டு, துரை பங்களாவின் பக்கம் ஓடினார்கள். சின்னான் அங்குதான் இருப்பான் என்பது அவர்கள் நம்பிக்கை. அப்பொழுதுதான் தூங்கி விழித்த துரை, துப் பாக்கியை எடுத்துக்கொண்டு, கீழே இறங்கினார். கூட்டம் அடக்கக்கூடியதாக இல்லை. மறுபடியும் உள்ளே போய், கொழும்புப் போலீஸாரை டெலிபோனில் அழைத்து விட்டு, அவர் கூட்டத்தை நோக் கிச் சுட்டார். கூட்டம் சின்னான் வீட்டில் தீ வைத்து விட்டது. ஆனால், சின்னான் பைத்தியக்காரனல்லன். கூட்டம் வருமுன்பே எங்கோ ஓடிவிட்டான்.