உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

80 புதுமைப்பித்தன் கதைகள் எழவு வந்தான்னா ஆபீஸுக்கு வந்து யாருக்காவது வத்தி வச்சுட் டுப் போயிடரது... மின்னே வந்தப்போ, என்ன சொன்னானோ அந்த ஆர்ட்டிஸ்ட் 'பதி' இருந்தானே அவனுக்குச் சீட்டுக் கொடுக்க வழி பண்ணிட்டான்..." என்று படபடவென்று பேசிக் கொண்டே போனார் முருகதாசர். 24 "அப்படிப் பார்த்தா உலகத்திலேயே யார் தான் ஸார் நல்லவன்! அவன் உங்களைப் பத்தி ரொம்பப் பிரமாதமாக அல்லவா கண்ட இடத்திலெல்லாம் புகழ்ந்து கொண்டிருக் கிறான்?" 'சவத்தெத் தள்ளுங்க, ஸார்! பேன் பார்த்தாலும் பார்க்கும், காதை அறுத்தாலும் அறுக்கும். அவன் சங்காத் தமே நமக்கு வேண்டாம்...... நீங்க என்ன சொல்ல வாயெடுத்தீர்கள்?" அதுதான். உங்களெப் பத்தித்தான் ஒரு இங்கிலீஷ் காரனிடம் பிரமாதமாகப் பேசிக் கொண்டிருந்தான்..." இவ்வளவுதானா! கதையை எழுதரேன், அல்லது கத்தரிக்காயை அறுக்கிறேன். இவனுக்கென்ன...? >: அதே சமயத்தில் வெளியிலிருந்து, 'முருகதாஸ்! முருகதாஸ்!" என்று யாரோ கூப்பிட்டார்கள். அதுதான்! அவன்தான் வந்திருக்கிறான் போலிருக் கிறது? பயலுக்கு நூறு வயசு... சைத்தான் நினைக்கு முன்னால் வந்து நிற்பான்' என் பதுதான்!" என்று முணுமுணுத்தார் முருகதாசர். பிறகு அவர் எழுந்து நின்று வெளியில் தலையை நீட்டி யாரது?" என்றார். 'என்ன? நான் தான் சுந்தரம், இன்னும் என் குரல் தெரியவில்லையா?' என்று உரத்த குரலில், கடகடவென்று சிரித்துக்கொண்டு, உள்ளே நுழைந்தார் வந்தவர். அவரு டைய சிரிப்புக்கு இசைந்தபடி காலில் போட்டிருக்கும் ஜோடு தாளம் போட்டது. "என்ன சுந்தரமா? வா! வா! இப்பொத்தான் உன் னைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நீயும் வந்தாய்!