உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

86 புதுமைப்பித்தன் கதைகள் வைத்துத் தொடுத்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பல் முளைத்த மாதிரி, அவை கோணல் மாணலாகத் தொங்கின. நான் தோரணம் கோத்துக் கொண்டிருக்கிறேன்... பக்கத்திலே பிள்ளையார். பச்சைச் களிமண் ஈரமும், எண்ணெய்ப் பசையும் பளபளக்க, சர்க்கரைப் பொட்ட லம், காகிதக் குடை, நாவற்பழம், புளி வகையராக்களுடன் அரங்கத்தில் பிரவேசிக்கக் காத்திருக்கும் ராஜபார்ட்போல, ஏன் சிம்மாசனம் காலியாகட்டுமே, ஏறி உட்காருவோம்!" என்று காத்திருக்கும் பட்டத்திளவரசன்போல, பரிதாபகர மாகக் காத்துக் கொண்டிருக்கிறார். என் மனம் ஒரு ரசமான பேர் வழி. இந்த மாதிரியான சோம்பேறி வேலை எனக்குக் கிடைத்துவிட்டால், அது கண்டபடி ஓட ஆரம்பித்துவிடும். உனக்கு என்றது. ஒரு ரசமான கதை சொல்லட்டுமா?" 'பிரேக்' கழன்று போய்விட்டது. இனி வெறிதான்!" என்று திட்டப்படுத்திக் கொண்டேன். "ஆமாம்! வண்ணாரப்பேட்டையிலே சுப்பு வேளான் இருந்தானே,ஞாபகம் இருக்கிறதா?" என்றது. ஒரு வரிசைத் தோரணத்துக்கு இலைகளை வைத்துச் சரிக்கட்டி விட்டேன். "அவன்தான் ஆக்கு! கடைசியிலே வெள்ளைக் களி மண்ணையே தின்று செத்தானே. அந்த மருத வேளான் மகன்!" என்றது மறுபடியும். அப்படியேநான் எங்கள் ஊருக்குச் சென்றுவிட்டேன். அந்தத் தாமிரவருணி ஆற்றின் கரை, தூரத்திலே மேற்குத் தொடர்ச்சி மலை, சமீபத்தில் சுலோசன முதலி யார் பாலம், சின்னமண்டபம்,சுப்பிரமணியசாமி கோவில், சாலைத்தெரு, பேராச்சி கோவில்,மாந்தோப்பு, பனை விடலி கள். எங்கள் வீடு - எல்லாம் அப்படி அப்படியே என் கண் முன்பு தோன்றலாயின. -