உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

24 விநாயக சதுர்த்தி 87 'ஆமாம். எல்லாம் வாங்கிக்கொண்டு வந்தீர்களே! பிள்ளையாருக்கு விளாம்பழம் எங்கே?" என்று கேட்டுக் கொண்டே, சர்க்கரைப் பொட்டலத்தை எடுத்தாள் என் மனைவி. "கூடைக்காரி வருவாளே! வாங்கினாப் போகிறது!' என்று சொல்லி, ஒரு முரட்டு மாவிலையை எடுத்து, பத்து அங்குல இடத்தையும் அதொன்றினால் மறைத்து அலங் 'காரம்' செய்ய முயற்சித்தேன். 'கூடைக்காரி வந்தால்தானே! நீங்கள் போய் எட்டிப் பாருங்களேன்!" என்றாள் சகதர்மிணி. - "திட்டமாக வருவாள், நான் சொல்லுகிறேன் பார்' என்றேன். என் வாழ்க்கையில் ஒரு நாளாவது தீர்க்கதரிசி, அல்லது 'பலிக்காவிட்டால் பணம் வாபீஸ்!' என்று விளம் பரம் செய்யும் ஜாமீன் ஜோஸியராக ஆகிவிடுவது என்று. (சந்தர்ப்ப விசேஷத்தால்) என் சோம்பலை வியாக்கியானம் செய்தேன். பக்கத்திலே இருக்கும் பரிவாரங்களில் ஒன்றைப் பறி கொடுத்தார் விநாயகர். "சுப்பு வேளான் குடும்பத்துக்கே சாபம், தெரியுமா?" என்றது என் மனசு.

    • GOT GOT?"

கும்பினிக்காரன் வந்த புதுசு. அந்தக் காலத்திலே சுலோசன முதலியார் பாலம் கட்டலே நம்ம சாலைத் தெருதான் செப்பரை வரைக்கும் செல்லும். அங்கே தான் ஆற்றைக் கடக்க வேண்டும். கொக்கிரகுளத்திலே இப்பொழுது கச்சேரிகள் இருக்கே. அங்கே தான் கும்பினி யான் சரக்குகளைப் பிடித்துப் போடும் இடம். அந்த வட்டாரத்திலே நெசவும், பாய் முடைகிறதும்-- இந்த பத்தமடைப் பாய் இருக்கே அது -- ரொம்பப் பிரபலம். அப்பொழுது ஒரு இருநூறு முந்நூறு வண்ணான்களைக் குடியேற்றி வைத்தான் கும்பினிக்காரன். குஷ்டந் தீர்ந்த துறை என்ற பேர் 'வண்ணாரப்பேட்டை' என்று ஆயிற்று!" .