உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

பிரம்ம ராக்ஷஸ் 113 அந்தக் கருங்கற் பாறைப் படுக்கையிலே ஒரு எலும்புக் கூடு கிடந்தது! நன்னய பட்டன் பயம் என்பதை அறியாதவன். மரணத்தையும், பச்சை ரத்தப் பிரவாகத்தோடு வெளியே தெரியும் மண்டையோடுகளையும். அவன் கண்டு அஞ்சிய வனல்லன். ஆனால், அவனுக்கு அதை நெருங்க நெருங்க, முந்திய நாள் இரவு இருட்டிலே குகைக்குள் நுழைந்த சமயம் ஏற்பட்ட, விவரிக்க முடியாத. உள்ளத்தை விறைத்துப் போகச் செய்யும், உணர்ச்சிகள் தோன்ற லாயின. ஆனால் அவன் ஒன்றையும் பொருட்படுத்தாது நெருங்கினான். அப்பொழுது குகையின் எந்த இடைவெளியி லிருந்தோ ஒரு சிறு சூரிய கிரணம் வந்து, எலும்புக் கூட்டின் வலக் கண் குழியில் விழுந்தது. நன்னய பட்டன் முன்னால் ஓர் அடி யெடுத்துவைக்க முடியாது. கட்டுண்ட சர்ப்பம் போல நின்று, வெளிச்சம் விழுந்த மண்டை யோட்டில் இருக்கும் கண் குழியை நோக்கினான். ஒரு புழு நெளிவதுபோலத் தோன்றியது. அது புழுவா? அன்று. அதில் ஒரு சிறிய கருவண்டு, மெதுவாக வெளியேறி. ஒளி ஏணியில் ஏறிச் செல்வது போல்,சிறகை விரித்து நீங்கார மிட்டவண்ணம் பறந்து சென்று,முகட்டிலிருந்த இடை வெளியில் மறைந்தது. மறைந்ததுதான் தாமதம்! - அந்தத் துவாரத்திற்கு வெளியே அண்ட கோளமே இற்று விழும்படியாகக் காதைச் செவிடாக்கும் இடிச் சிரிப்பு! அது அந்த அமைதியின் நிலையமான சூரங்காட்டையே ஒரு குலுக்குக் குலுக்கியது. நன்னய பட்டன் உடல் வியர்த்தது. அவனது பூத வுடல் கட்டுக்கடங்காது நடுங்கியது; ஆனால். கண்கள் மட்டிலும் பயப்பிராந்தியில் பயப்பிராந்தியில் அறிவை இழக்கவில்லை. அசாதாரண விவகாரத்தில் தூண்டப்பட்டு, உண்மையை அறியத் தாவுகிறது என்பதை உணர்த்தும் பாவனையில்