உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

114 புதுமைப்பித்தன் கதைகள் எலும்புக் கூடு கிடக்கும் இடத்தையும், வண்டு மறைந்த திசையையும் ஒருங்கே கவனித்தான். வெடிபடச் செய்த சிரிப்பு மங்கியதும் சூரிய கிரணம் மறைந்தது. அசாதாரணமான அமைதி பிறந்தது. நன்னய பட்டன் குகையைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினான். கற்பாறைப் படுக்கைக்கு மறு பக்கம் குகையின் ஒரு சுவர். அதன்மேல் இருளிலும் தெரியக்கூடிய ஒளித் திராவகத்தால் சிவப்பாக எழுதப்பட்டதுபோன்ற யந்திரம். அதன் ஒரு பாகத்தில் தாமரைப் பூ ஒன்று செதுக்கப்பட் டிருந்தது. தாமரை மலரின் இதழ்கள் எலும்புக் கூட்டின் மார்பகத்துக்கு நேராக இரண்டடி டி. உயரத்தில் சுவரின் மேல் இருந்தன. கற் பலகையில், எலும்புக் கூட்டிற்கும் சுவருக்கும் உள்ள ஒரு சிறு இடை வெளியில், சுவரில் இருப்பதைப் போலவே யந்திரம் செதுக்கப்பட்டு, அதன் மையத்திலும் ஒரு செந்தாமரைப் புஷ்பம் செதுக்கப்பட்டிருந்தது. கற் பலகையில் வரையப்பட்ட யந்திரம் இருளில் பொன்னிற மாக மின்னியது. தாமரை மலர் வெண்மையான பளிங்கி னால் செய்து பொருத்தப்பட்டது போல் இருந்தது. நன்னய பட்டன் அதன்மீது கையை வைத்துத் தடவிப் பார்த்தான். அது தனியாகச் செதுக்கிப் பாறை யில் பொருத்தப்படாத விசித்திரமாக இருந்தது. எப்படி அமைக்கப்பட்டது? அது எலும்புக் கூடு ஆறடி நீளம். உயிருடன் இருந்த பொழுது அம்மனிதன் ராக்ஷஸன் போல இருந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு நினைத்துக்கொள்ளவே, நன்னய பட்டன் வேறு பக்கமாகத் தலையை நிமிர்த்தி நோக்கினான். என்ன ஆச்சரியம்! ஒரு பிரம்மாண்டமான முதலை வாயைத் திறந்து கொண்டு அந்தரத்தில் தொங்கியது. இருட்டில் தோன்றும் மயக்கமா?