உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

128 புதுமைப்பித்தன் கதைகள் அப்பொழுதும் சுவாமிஜீ பிரசங்கம் நடக்கிறது.

"அப்பன் அதோ இக்குராரு..." என்றது சிசுக்குரல். பிறக்கும் போதே பிச்சையா! "...ஆனால் உயர்ந்த ஆதர்சங்களுக்காக, மனித வர்க்கத் தின் இலட்சியங்களுக்காக, எத்தனை போர்கள்! எத்தனை சச்சரவுகள்! உண்மைக்குக் குணம் ஒன்றுதான்! அதை யடையும் பாதைகள் பல..அதை யறியாத மனித நாகரிகம் அதற்குப் பிரசாரத்தைத் தொடங்கியது. நாங்கள் கூறு வது ஒன்றுதான். பேதங்கள் தோல் ஆளமுள்ளவை, இன் பம் ஒன்றுதான். இதன் சோபையும், அழகுமே கலியுக அவதார புருஷன் கிருஷ்ணாஜீ..." "இவன் கண்டான் பெரிசா" என்று ஓர் இட்டிலியை விண்டு வாயினுள் போட்டான் நாடோடி. மெதுவாக வீசிக் கொண்டிருந்த காற்று, திடீரென்று அதிகப்பட்டு, பெரும் பெரும் தூற்றலுடன் வீச ஆரம் பித்தது. நாடோடி மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஒரு மரத் தின் நிழலுக்கு ஓடினான். அதில்தான் குளுவக் குடும்பத் தின் வாசம். குளுவச்சி மழை அதிகரிக்கிறது என்று மண்டபத்தை நோக்கி ஓடினாள். "சீ, மூதேவி! எங்கே ஏறுறே! ஆள் இருக்கிறது தெரி யலே! போ!" என்று ஒரு பெண் குரல் சீறியது. மழை சொஞ்சம் பலந்தான். குளுவனுடைய சின்னக் குழந்தை மழை பெய்கிறது என்று கத்த ஆரம்பித்து விட்டது. "ஓய்! ஜக்கம்மா! மந்தரம் போடறேன் பார்! பாப்பா. மளை நிக்குது! ஏ! மளை நிக்கலே! எங்க பாப் பாத்தி அளுவுரா! ஜவ்! மந்திரக்காளி! ஜூ! மந்திரக் காளி!" என்று குழந்தைக்கு வேடிக்கை காட்டிக்கொண் டிருந்தான் குளுவன். குழந்தை இவன் பேச்சில் லயித்துச் சிரித்தது. விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டு ஓடிவரும் குளு வச்சியைப் பார்த்து, 'வேணுண்டி உனக்கு! ஒதைக்கிலே" என்றான் குளுவன்.