உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

மனித யந்திரம் 153 ராமையாப்பிள்ளை பேரேட்டைத்திருப்பிக்கூட்ட ஆரம்பித் தார். 'வீசம், அரைக்கால், அரையோரைக்கால்...' "என்ன அண்ணாச்சி, இன்னங் கடை யடைக்கலே? என்னத்தே விளுந்து விளுந்து பாக்கிய?" என்றுகொண்டே வந்தார் மாவடியா பிள்ளை. "வாரும், இரியும்" என்று சொல்லி, மறுபடியும் கணக்கில் ஈடுபட்டார் பிள்ளை. 'என்னய்யா, வண்டி போயிருக்குமே! இன்னமா? உமக்கென்ன பயித்தியம்?" 48 'தம்பி, நீங்க ஒரு மூணுவீசம் அரை வீசம் கொடுக் கணுமில்லே; நாளாயிட்டுதே! கொஞ்சம் பாருங்க, கடைலே பெரண்டாத்தானே முடியும்?" அதுக்கென்னையா வர்ர வியாழக்கிழமை பாக்கிறேன். நீங்க வீசம்படி * பின்னைக்கி எண்ணை குடுங்க: எல்லாத் தையும் சேர்த்துக் குடுத்திடுவேன்!" பார்த்துச் செய்யுங்க!" என்று சொல்லிக்கொண்டே மேல் துண்டை எடுத்து ஒரு தோளில் போட்டுக்கொண்டு எழுந்தார். கொட்டாவி வந்துவிட்டது. வாய்ப் பக்கம் விரலால் சுடக்கு விட்டுக்கொண்டே,'மகாதேவ, மகாதேவ என்று முணுமுணுத்த வண்ணம், நெடுங்காலக் களிம்பால் பச்சை ஏறிப்போன புன்னைக்காய் எண்ணெ யிருக்கும் செப்புப் பாத்திரத்தண்டை சென்றார். குனியுமுன் தலையை விரித்து உதறி, இடது கையால் அள்ளிச் சொருகிக் கொண்டு, கட்டை விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் பிடித்து வீசம் படியில் எண்ணெயை எடுத்துக்கொண்டு திரும்பினார். "தம்பி!" என்றுகொண்டே நீட்டினார். மாவடியாபிள்ளை கையில் இருந்த சிறு பித்தளை டம்ளரில் வாங்கிக்கொண்டார். பிள்ளையவர்கள் மறுபடியும் ஒழுங்காக மேல்துண்டை மடித்துப் பெட்டியடியில்போட்டுக்கொண்டு, "மகாதேவா! என்று வாய்விட்டு ஓலமிட்ட வண்ணம், ஒற்றைக் கையைப்

பின்னைக்கி எண்ணை- புன்னைக்காய் எண்ணெய்.