உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

174 புதுமைப்பித்தன் கதைகள் அப்பொழுது இந்த அகண்ட உலகத்தில் உள்ள சராசரங்களின் அழகு, அதன் காரணம், அதன் மூலம் இவையெல்லாவற்றையும் அறிய ஓர் ஆர்வம். அதனால் தான் இந்தத் தனியிடத்தில் வந்து நிம்மதியாகத் தமது ஆசையைப் பூர்த்தி செய்துகொள்ளத் தனித்திருக்கிறார். சமூகத்தை விட்டு விலகித் தமது பத்தினியுடன் இங்கு வசித்து வருகிறார். அவருக்கு வயது முப்பது. கறுத்து அடர்ந்த தாடி அகன்று பிரகாசமான ஒளிவிடும் கண்கள், மெல்லிய உதடு,பரந்து விரிந்து திரண்ட மார்பு, ஒடுங்கிய வயிறு. எல்லாவற்றிலும் இயற்கையின் கனிவு பொங்கியது. மிருக அழகன்று - ஆளை மயக்காது, வசீகரிக்கும். அந்தக் கண்களில், அந்த உதடுகளில் ஒரு தெய்வீக ஒளி- தேஜஸ் - உள்ளத்தின் சாந்தியை எடுத்துக் காட்டிற்று. அவர் . மனைவி,- அவள்தான் அகல்யை. அவர் ஆணுக்கு இலட்சியம் என்றால், இவள் பெண் குலத்திற்கு வெற்றி. மருண்ட பார்வை, அவரைக் காணுந்தோறும் காதல் பொங்கும் கண்கள். அவரைத் தனது உள்ளத்தில் மட்டும் வைத்துவிடவில்லை. அவளது ஒவ்வொரு செய லும் அவரது இன்பத்திற்காகவே. அதிலே அவளுக்கு ஓர் இன்பம். கௌதமரும் இவளைக் காதலிக்கிறார். ஆனால் அவர் காதல் காட்டாறு போன்றதன்று - சாந்தியிலே பிறந்தது. அவர் மனம் இடியச் செய்ய ஒரு லேசான வழி, அவள் மேல் ஒரு துரும்பை எடுத்து வீசினாலும் போதும். அவரு டைய காதலின் உயர்வை அவள் அறிந்திருந்தாள். அவள் கற்புள்ளவளாக இருந்ததில் ஆச்சரியமில்லை. அவர் அவளுடைய இலட்சியம். அதனால், அவள் கற்புடன் இருந்ததில் என்ன அதிசயம் ! II ஒருநாள் சாயங்காலம். சூரியன் இன்னும் அஸ்தமிக்க வில்லை. தூரத்திலிருக்கும் பனிமலைகள் செந்தழலாகக் கனிந் தன. அகல்யை குடிசைக்குள்ளிருந்து குடத்தை இடுப்பில்