உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

அகல்யை 195 ஏந்திய வண்ணம் வெளி முற்றத்திற்கு வருகிறாள்.அந்த வெளி முற்றத்தில் கௌதமர் ஒரு கிரந்தத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் வந்து நிற்கிறாள். கௌதமருக்குச் சற்று நேரம் அவள் இருப்பது தெரி யாது. கிரந்தத்தில் இருந்த லயிப்பு அப்படி. பிறகு, வந்திருக்கிறது தெரிந்தது. அன்பு கனிந்த பார்வையுடன். சிரித்துக்கொண்டு, "என்ன அகல்யா. நேரமாகி விட்டதா? குளிக்கவா? நான் கொஞ்சங் கழித்து வருகிறேன். கிரந்தத்தில் கொஞ்சந்தான் பாக்கியிருக் கிறது!" என்றார். . குடத்தைக் கீழே வைத்துவிட்டு அவர் தலையை மார்புடன் சேர்த்தணைக்கிறாள். நெற்றியில் அவள் அதரங்கள் படிந்து அப்படியே சற்று நேரம் இருக் கின்றன. "நான் வருகிறேன்! என்று குடத்தை எடுத்துக் கொண்டு நதிக்குச் செல்லுகிறாள். அவள் மனத்தில் ஓர் ஏமாற்றம்,- இத்தனை நேரம் எதிர்பார்த்திருந்தது நடக்கா ததினால். - கணவருடன் சிரித்தும் குதூகலமாக விளை யாடிக்கொண்டும் நதிக்குச் செல்ல முடியாமையினால். அவர்மீது கோபமும் இல்லை. அவள் வெகு வேகமாக நதியை யடைகிறாள். உடைகளைத் துவைப்பது, குடத்தைத் தேய்ப்பது,- எல்லாம் வெகு துரிதமாக நடக்கின்றன. மீது உடைகளையெல்லாம் களைந்து பாறையின் வைத்துவிட்டு நீரில் குதிக்கிறாள். அந்தக் குளிர்ந்த நீரில் நீந்தி விளையாடுவதில் என்ன இன்பமோ! ஆழமான சிந்து வீல் முக்குளிப்பதும், மறுபடியும் பாறையில் ஏறிக் குதித்து நீந்துவதுமாக. அதிலேயே லயித்துப்போய் வீட்டாள். அப்பொழுது எங்கிருந்தோ இந்திரன் எதிர்க் கரை பில் வந்தான். அகல்யையின் கட்டழகு அவனைக் கல் லாகச் சமைத்தது; வைத்த கண் மாறாமல் பார்க்கும்படி செய்தது. அவளை எப்படியேனும் அடைய வேண்டும்