உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

176 புதுமைப்பித்தன் கதைகள் என்று தீர்மானித்துக்கொண்டு, பாறையில் இறங்கினான். அவளை நெருங்க ஒரு இந்தச் சப்தம் அகல்யையின் காதில் விழுகிறது. திரும்பிப் பார்க்கிறாள். ஓர் ஆடவன்! நேர்மையற்ற மிருக உணர்ச்சி பொருந்திய முகம்! அழகுதான்! நெருங் குவதின் அர்த்தம் அவளுக்குப் பட்டது. அப்படியே வெறித்து ஒரு கோபப் பார்வை பார்க்கிறாள். . இந்திரன் நடு நடுங்கி அப்படியே நின்றுவிட்டான். இப்படி எதிர்பார்க்கவில்லை அவன். அகல்யா ஒரு பாறையின் பக்கத்தில் மறைந்து உடை களைச் சீக்கிரம் அணிந்துகொண்டு, குடத்தில் தண்ணீ ருடன், வெகு வேகமாகக் கரையேறிச் சென்றுவிடுகிறாள். . இந்திரன் மனத்தில் அவளை அடையவேண்டும் அடையவேண்டும் என்ற ஒரே எண்ணந்தான். அவள் யார், தான் செய்யப் புகுந்தது என்ன என்று எண்ண மனத்தில் இடமில்லை. பைத்தியம் பிடித்தவள்போல் ஒரே வெறித்த பார்வை யுடன் சென்றுகொண்டிருக்கும் அவள் எதிரே கௌதமர் வருகிறார். குடம் கையிலிருந்து நழுவுகிறது. ஒரே ஓட்ட மாக ஓடி அவர் மார்பில் விழுந்து கோவென்று கதறு கிறாள். கௌதமர் அவளை யணைத்த வண்ணம். "என்ன? என்ன?" என்றார். தேம்பிக்கொண்டே நடந்ததைத் தெரிவிக்கிறாள். அவளைத் தேற்றிக் குடிசைக்குக் கொண்டுவிட வேண்டி யிருந்தது. அவளது உயர்ந்த காதல். அதன் முடிவாக அதன் சிகரமாக இருக்கும் அவள் கற்பு, அவருக்கு ஒரு புதிய உண்மையைத் தெரிவிக்கிறது. அதுதான் மற்ற ஆண்களிடம் மனத்திலே ஏற்படும் அருவருப்பு. III இந்திரன் ஒரே தடவையில் தனது எண்ணம் ஈடேறச் சமயம் எதிர்பார்த்திருந்தான்.