உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

178 புதுமைப்பித்தன் கதைகள் கணவரை முத்தமிடக் கண்களை விழிக்கிறாள். ஐயோ, அந்தச் சண்டாளன்!- எல்லாம் சுழலுகிறது. ஒன்றும் அர்த்தமாகவில்லை. சொந்த வீட்டிற்குள் இவன் எப்படி...? பக்கத்திலிருந்த தடியால் அவன் மண்டையில் அடித்து உதறித் தள்ளிவிட்டு, ஒரு புறம் கிடந்து புரண்டு துடிக்கிறாள். இந்திரனுக்கு சுய அறிவு வருகிறது. தன் பைத்தியக் காரத்தனம், தன் மிருகத்தனமான கொடுமை!...அவன் உள்ளமே வெடித்து விடும்போல் இருக்கிறது. நதிக்குச் சென்ற கௌதமர் இன்னும் விடியாததைக் கண்டு, ஏதோ சூது நடந்திருக்கிறதென்று விரைந்து வருகிறார். உள்ளே சரேலென்று நுழைந்ததும், அகல்யை கிடக் கும் கோலத்தில், காரியம் மிஞ்சிவிட்டது என்று அறிந் தார். உடனே தம் மனைவியை வாரி எடுக்கிறார். தீயில் பட்ட புழுப்போல் அவள் உடல் துடித்துப் பதறுகிறது. G+ குற்றத்தின் பாரமே உருவாக இந்திரன் நிற்கிறான். 'அப்பா இந்திரா! உலகத்துப் பெண்களைச் சற்று சகோதரி களாக நினைக்கக்கூடாதா?" 6 'கண்ணே அகல்யா, அந்தச் சமயத்தில் உனது உடலுமா உணர்ச்சியற்ற கல்லாய்ச் சமைந்துவிட்டது?" என்று அவள் தலையைத் தடவிக் கொடுக்கிறார். அவர் மனத்தில் ஒரு சாந்தி. ஒரு புதிய உண்மை. உணர்ச்சி தேவனையும் மிருகமாக்கி விடுகிறது. மனத் தூய்மையில்தான் கற்பு. சந்தர்ப்பத்தால் உடல் களங்க மானால் அபலை என்ன செய்ய முடியும்? மெளனம். இந்திரா! போய்வா!" என்றார் கௌதமர், அப்பொழு தும் அவர் மனத்தின் சாந்தி தெளிவாகத் தெரிந்த்து. அகல்யை? அவள் உள்ளத்தில் நிகழ்ந்த ஊழியின் இறுதிக் கூத்து, கணவனின் சாந்திக்குப் பகைப்புலமாக நின்றது.