________________
சென்னைப் பல்கலைக் கழகம் திராவிட இயக்கக் கருத்தரங்கம் நாள் 27.4.1998 கல்வி அமைச்சர் பேராசிரியர் அவர்களின் தொடக்க உரை சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் மனோகரன் அவர்களே, வரவேற்புரை வழங்கிய பேராசிரியர் தாண்டவன் அவர்களே, கருத்தரங்கக் கட்டுரைச் சுருக்கம் பெறும் பேராசிரியர் பாலாஜி பிரசாத் அவர்களே, கருத்தரங்க இயக்குநர் பேராசிரியர் குணசீலன் அவர்களே, கருத்துரைகள் வழங்கவிருக்கின்ற பல துறைப் பேராசிரியர்களே! மாணவர்களே! நண்பர்களே! இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைக்கின்ற நல்ல வாய்ப்பினைப் பெற்றதன் மூலம், என் வாழ்நாள் குறிக்கோளுக்கு உகந்த இலட்சியத்தை விளக்கும் வாய்ப்பினை எனக்கு அளித்திருப்பதற்காக என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள், 20வது நூற்றாண்டின் இரண்டாவது பத்தாம் ஆண்டில்