உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

184 புதுமைப்பித்தன் கதைகள் "நீ என்ன சாதி?" "நாங்க வெள்ளாம் புள்ளெக (வேளாளர்கள்)! நீரு? "நான் தேவமாரு!" "தேவமாரா! என்ன அய்யா,இப்படியும் உண்டா? உம்ம சாதிக்காரன் ஊரெல்லாம் இப்படி கொள்ளே போடு ரப்ப, நீங்க பெரிய மனிசரெல்லாம் சும்மா யிருக்கலாமா? அந்த அநியாயத்தே நீங்க பார்த்துச் சும்மா இருக்கலாமா? கலி காலமா?" என்றாள். 64 "கெழவிக்கு வாய்த்துடுக்கெப் பாரு!" என்று கோபித் தவன், கலகலவென்று சிரித்துவிட்டு, அது கொலத் தொழிலுதானே! ஆமாம், நீ சொல்லுவது போல கலி தான்.நீ என்னமோ தெரியாமே பேசுறயே. அவன் வேறே கிளை, நான் வேறே, அந்தப் பய கொண்டையங் கோட்டை யான். நான் வீரம் முடிதாங்கி...ஆமாங் கெழவி, ஏன் பதறிப் பதறிச் சாகிறே?" என்று கேலியாகக் கேட்டான் அந்தத் தேவன். "ஆமாம் எங்கிட்டே லெச்ச லெச்சமா இருக்கு, நான் பதரறேன்!" என்று ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள். "பொய் சொல்லாதே. மடிலே கனமிருந்தா வழிலே பயம்," என்று சிரித்தான் அந்த அந்நியன். "ஒம்ம கிட்ட உண்மையெச் சொன்னா என்ன? என் மகளுக்குக் கலியாணம். நான் போயித்தான் நாலு வேலெ பாக்கணும், ஒரு சோடு இரவல் பாம்படம் வாங்கிக்கிட்டுப் போறேன். ஏதோ பகட்டா செய்தாத்தானே நாலு பேரு மதிப்பான்!" என்றாள் கிழவி. 'பாம்படமாவதிருக்கே!" என்று கேட்டுவிட்டு அவ ளைக் கூர்ந்து நோக்கினான். பிறகு, "எத்தினி மக்கள் உனக்கு? மகள் என்ன மூத்ததா?" என்று கேட்டான். அவன் கண்களும் மனமும் கிழவியைத் துருவிக்கொண் டிருந்தன. "எல்லாம் ஒத்தைக்கொன்னுதான்?" சரி.