உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197

கோபாலபுரம் 197 மனிதன் அவனைப் போல் அசட்டுத்தனமான பிரகிருதிகள் கிடையா. மனிதன் புழு! அவளுக்கு என் உள்ளத்து எரிமலையின் கொந்தளிப் புத் தெரியாது. கோபாலபுர மோகத்தில் நாவல் எழுதவேண்டும் என்ற பைத்தியம் பிடித்தது. கோபாலபுரத்தில் வாழ்க்கை யைச் சித்திரிப்பது இலக்கியத்தின் வெற்றி என்று நினைத் தேன். படமும் படிப்படியாக வளர ஆரம்பித்தது. அதில் லக்ஷ்மியும் இடம் பெற்றது அதிசயமன்று. சன்னல் லிருந்து பார்க்கும்பொழுது லக்ஷ்மியின் களங்கமற்ற சிரிப்பு எனது நாவலின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தது. அன்று தீபாவளிக்கு முதல் நாள். அவளுடைய புரு ஷனும் பட்டணத்திலிருந்து வந்திருந்தான். பண்ணையார் வீட்டில் ஏகத் தடபுடல் என்று நான் சொல்ல வேண்டுமா? மறுநாள் இந்தப் புழுக்களின் தன்மையைக் காண்பிக்கும் காள் என்று யார் கண்டார்கள்? மத்தியானம் நான் அவர்கள் வீட்டிற்குள் போனேன். வாசற்படியில் ஏறினதும் எனக்கு என்னமோ ஒரு மாதிரி யாக இருந்தது. எல்லோரும் கூடத்தில் உட்கார்ந்திருந் தார்கள். பண்ணையார் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந் தார். எதிரில் ஒரு ஸோபாவில் லக்ஷ்மியும் அவள் கணவ னும் உட்கார்ந்திருந்தார்கள். மூவருக்கும் எதிரில் அவள் தம்பி சுந்து, பெரிய மனிதன்போல், உட்கார்ந்திருந்தான். லக்ஷ்மியின் முகம் குன்றிப்போய் வெளிறியிருந்தது.அவள் கணவன் சித்திரப் பதுமைமாதிரி திருதிரு வென்று விழித் துக் கொண்டிருந்தான். அம்பி அவரிடம் ஒரு கடிதம் கொடுத்தான். உமது மேஜையில் இருந்ததாம். அதை எழுதியது நீர் தானா பாரும்!" என்றார் பண்ணையார். எனது மனம் களங்கமற்றிருந்தால்தானே! கடிதம் நான் தான் எழுதினது. ஆனால் அது எனது நாவலின் ஒரு பகுதி. அப்படிச் சொன்னால் நம்புவார்களா அவள் பெயரும் லக்ஷ்மி. நானும் என்னால் இயன்றவரை சொன்னேன். மனம் களங்கமாக இருக்கும்பொழுது என்னதான் சொல்ல முடியும்? எனக்குச் சுந்துவின்மீது கோபம் வந்தது. 13 44 ?