உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201

கொன்ற சிரிப்பு 201 அன்று காவேரி ஜலம் எடுத்துவரச் சற்றுத்தாமதம். கானப்பிரியனுக்குக் குயில் சொன்ன கதையையும், மலர் பாடிய பாட்டையும் அவளுக்குச் சொல்ல ஆவல். அந்தச் சூரியாஸ்தமனத்தை அவளிடம் காண்பிக்க... அதோ அவள் வருகிறாள், ஆசைக் காவேரி! "கானனா? வா,வா" என்று குடத்தை ஜலத்தில் கழுவவிட்டு அவன்மீது சாய்கிறாள். குயில்." 'இன்று ஏன் இவ்வளவு நேரம், போ! அந்தக் "கானா, இன்று உனக்கு ஒரு சமாசாரம், நீ ஏன் உன் கவியைக் கொண்டு மன்னனிடம் பரிசு பெறக் கூடாது? இன்று யாரோ ஒரு கவியாம், போகிறானாம், அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நீ பாடுவதில் நூற்றில் ஒன்று கூட இல்லை. வெறும் வார்த்தைக் குப்பை,நீயேன்..." நானா! அரசனிடமா? நானா?" ஏன்,கானா? நாம் இருவரும்...." என்று தழுவிக் குழைந்து அவன் கண்களில் உற்று நோக்கினாள்.இரு வரும் ஐக்கியப்பட்ட வாழ்க்கையின் கனவு அவள் கண் களில் தவழ்ந்தது. காவேரி! உனக்காக நான் போகிறேன்..." "என்ன,கானா, எனக்காகவா?" "இல்லை கண்ணே. நமக்காக."... சற்று மெளனம். இருவரும் தழுவி நிற்கின்றனர். அந்த மௌனத்தில் வளவோ. அவர்கள் அறிந்தது எவ் ள சோழ சமஸ்தானம். அந்தகன் கொலுவில் உல்லாசமாக இருக்கிறான். பக்கத்தில் அவனது பிரியை - அதாவது, மரியாதையாக வைப்பு - வாஸந்திகை என்ற ஆந்திரப் பெண். மற்றப்