உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203

r கொன்ற சிரிப்பு கானப்பிரியன் அவளைக் கவனிக்கவில்லை. அரசனை நோக்கிப் பாடுகிறான். ஒரு காதற் பாட்டு. 203 அந்தக் காலத்திலே பாட்டுடைத் தலைவன் பரிசில் கொடுக்கவேண்டிய அரசனாக இருக்க வேண்டியது மரபு. அதெல்லாம் நினைக்கவில்லை.ஏன்? ஏன்? தெரியாது. அவனது காவேரியின் காதல், அவள் கன்னி எழில், வாழ்க்கைக் கனவு எல்லாம் கவிதையாக வடிவெடுத்துப் பொங்குகிறது. கம்பீரமான, மோகனமான குரலிலே பாடு கிறான். அங்கிருக்கும் சிங்காதனம்கூட உருகிச் சிரக்கம்பம் செய்யும் போலிருக்கிறது. ஏன் ? கம்பன் குரலைக் கேட்டதுதானே! அங்கு இரண்டு உள்ளங்களை அது தொடவில்லை. ஒன்று வெற்றியை நினைத்து வலை வீசிய கண்களை யுடை யது. இன்னொன்று, அவளைக் குறித்துப் பாடுவதாக, அவள்மீது அநாவசியமாகக் காதல் கொண்டுவிட்டதாக நினைத்த நெஞ்சம். பாட்டு முடிந்தது! எங்கும் நிசப்தம். திடீரென்று, ஆஸ்தான மண்டபமே எதிரொலிக்கும் படி எக்காளச் சிரிப்பு ! ஏளனத்திலே, பொருளற்ற கேலிக்கூத்திலே, கீழ்த் தரக் காமச் சுவையிலே தோன்றி அலைமேல் அலையா யெழுந்த அந்தகனின் எக்காளச் சிரிப்பு ! 'சபாஷ். வென்றுவிட்டாயடி வாஸந்திகா!" என்று அவளுக்குக் கீச்சங் காட்டிக்கொண்டு, அவசரத்தில் எச்சிலை ஸ்படிகத்திற்குப் பதில் யார்முகத்திலோ உமிழ்ந்து விட்டான். இருந்தாலும் உற்சாகம் ஓயக்காணோம். "என்ன, இருந்தால் உன் அழகு இப்படியல்லவா சபையில் இருக்க 1