உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


________________

17 காரணத்தினாலேதான் மனோன்மணீயம் சுந்தரனார் "நீராருங் கடலுடுத்த" என்று தொடங்குகிற பாடலில், வைதிகம் வளர்க்கும் வடமொழி ஆதிக்கத்தால் தமிழ் இழிவுக்கு ஆட்படுத்தப்பட்டதைப் பொறுக்காமல், வடமொழியின் தகுதியை உணர்த்த அம்மொழி வழக்கிழந்து ஒழிந்த மொழி என்று சொன்னார். நான் மொழி அடிப்படையிலே மேலும் விளக்கம் சொல்லத் தேவையில்லை. புரட்சிப் பாவேந்தர் பாடினார், 66 ஆதிமனிதன் தமிழன்தான், அவன் மொழிந்ததும் செந்தமிழ்த்தேன் மூதறிஞர் ஒழுக்க நெறிகள் முதலில் கண்டதும் தமிழகந்தான் காதல் வாழ்வும், புகழ் வாழ்வும் காட்டியதும் தமிழ் நான்மறைதான் ஓதும் அந்தத் தமிழ் நான்மறை உலகம் போற்றும் முத்தமிழ்தான்" என்று தமிழனுடைய பெருமையை விவரித்தார். மேலும் ஒரு பழம் பாடல் தமிழின் மாட்சியை உணர்த்துகிறது. "ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிர் ஒன்று, ஏனையது தன்னேர் இலாத தமிழ்" என்பது அப்பாட்டு. உலகோர் துயருக்கு இடமாகும் இருளகற்றுவன இரண்டு ஒன்று செஞ்ஞாயிறு மற்றொன்று செந்தமிழ் என்பது பாடல் தரும் கருத்து. உலகத்தில் தோன்றிய முதல் மனிதனோடு ஒட்டிய உறவுடைய இனம் என்று, உலகத்து மக்களிடையே பல்வேறு தொடர்பு காட்டக்கூடிய இனம் இருக்குமேயானால் அவர்கள் தமிழர்களாக திராவிடர்களாகத்தான், இருப்பார்கள். தமிழ் பேசுகிறவர்களை மட்டுமே நான் குறிப்பிடவில்லை. திராவிட இனம் என்று வரலாற்றில்