46
________________
46 A மதிக்கவில்லை என்பதை, அப்போது அரசாங்க அலுவல்களில் இடம் பெற்றோர் யார் என்பதைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்தியர்களுக்குக் கொடுக்கப்பட்ட மிக உயர்ந்த பதவிகள் எந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டன என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆளுநரின் ஆட்சிக் குழுவுக்கு இந்தியர்களையும் நியமிக்கலாம் என்று முடிவு செய்தபின், வரிசையாக மூன்று பேர் நியமிக்கப்பட்டனர்; அதில் கடைசி இருவர் பிராமண வழக்கறிஞர்கள். உயர்நீதிமன்ற இந்திய நீதிபதிகள் ஐவரில், நால்வர் அதாவது இந்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்திலும் பிராமணர்களே நியமிக்கப்பட்டனர். 1914இல் அரசாங்கத்திற்கு ஒரு புதிய செயலாளர் பதவியைத் தோற்றுவித்து அதிலே ஒரு பிராமணரை நியமித்தனர். வெளியுறவு இந்தியச் செயலாளர் ஒரு பிராமணர். அரசாங்க அலுவலர்களிலேயிருந்து மாவட்டக் கலெக்டர்களாக நியமிக்கப் படவேண்டிய இருவரும் பிராமணர்களாகவே நியமிக்கப்பட்டனர். சென்னைப் பல்கலைக் கழக இந்திய உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் பிராமணர்களாக இருந்தபடியால்தான், தமிழுக்கு இங்கே மரியாதை இல்லாமலிருந்தது. சென்னைப் பல்கலைக்கழக இந்திய உறுப்பினர்கள் பெரும்பாலும் பிராமணர்களாக இருந்தபடியால், பல்கலைக்கழகத்திலிருந்து சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் படுவோரில் (University representation) பிராமணர் அல்லாதார் எப்போதும் வெற்றிபெறுவதில்லை. இதனால் எத்துணைக் கல்வித் தகுதியுடையவராக இருப்பினும், பிராமணர்