உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58


________________

58 தெரியவந்தது. ஏகலைவன் வெட்டித் தர மறுத்திருந்தால் துரோணரின் வருணதரும மனப்பான்மையை நாடறிந்திருக்குமா?" என்று. ஆனால், இன்றைக்கு அந்த ஏகலைவனும், தனக்கு வில்வித்தையைச் சொல்லி கொடுக்காத துரோணரை நோக்கி "ஏனய்யா, என் கட்டை விரல் காணிக்கை?' என்று கேட்பான். இக்காலப் பகுத்தறிவு வாதியானால், துரோணர் கேட்ட கட்டை விரலைத் தருவதற்குத் தன் கட்டை விரலைப் போன்றே ஒரு களிமண் கட்டை விரலைச் செய்து அவருக்குக் காணிக்கையாக்கி இருப்பான். அவர் வேண்டுமானால் அதற்கு வழிபாடு செய்து பயன் பெறட்டும் என்பான். அக்காலத்தில் ஏகலைவன் போன்றோர் எவ்வளவு வெள்ளை மனத்தினராக உண்மையுடன் நடந்து கொண்டனர் என்பதை இச்செய்தி உணர்த்தும். உரிமை உணர்வு அடியோடு மரத்துப்போய் இருந்தபோது அந்த மனநிலை. உரிமை உணர்வு வருகிறபோது அந்த மனநிலை மாறத்தான் செய்யும். மனிதனின் உரிமை உணர்வைக் காவாத மனப்பான்மைதான் தமிழனை வீழ்த்த ஏதுவாயிற்று. ஆரியர்கள் எல்லோரும் அறிவாளிகள் அல்லர். பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்கார், இராமச்சந்திர தீட்சிதர், பேராசிரியர் நீலகண்ட சாத்திரி போன்று எத்தனை பேர் இருக்கிறார்கள்? பார்ப்பனர்களுக்கு மட்டுமே அறிவு சொந்தமில்லை, எனினும், அவர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு தரப்பட்டிருந்தது. அதனால் ஆர்வம் கொண்டு உழைத்தார்கள். நம்முடைய மனப்பான்மையில், நம்முடைய தகுதிக்கு மேம்பட்டதை நாம் அடைந்துள்ளதாக எண்ணுவதால் மேலும் தொடர்ந்து முயலும் வேட்கை வளரவில்லை. அதற்கு மாறாகப் பார்ப்பனர் எல்லாத் தகுதியும் ஞானமும் தங்களுக்கே உண்டென்று உரிமை கொண்டாடிப் பழக்கப்பட்டதால், மேலும், மேலும் உயர்வடையும்