இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
45
மதி: (ஏக்கத்துடன்) நாலு நாட்கள் நான் எப்படிக் சகிப்பேன்?
பெண்: நாலு நாட்கள் கண்ணாளா? (விரலை வேகமாக தட்டிக் காட்டியபடி) ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, நாலே நாலு நாட்கள், பிறகு...
மதி: பிறகு?
[பாசத்துடன் பார்க்கிறான். அவள் புறப்பட, மதிவாணனும் கிளம்புகிறான். அவள் வரவேண்டாம் என்று தடுக்கிறாள் ஜாடையாக. மதிவாணன் ஏக்கத்துடன் நிற்கிறான். மேலங்கி, தலையணி, சட்டை ஆகியவைகளைச் சரிப்படுத்திக் கொண்டு வெளியே வருகிறாள் தங்கம்.]
[கலை விழாவில், மதிவாணர், கலை மன்னன் என்ற பட்டம் அளிக்கப்படுகிறான். மதி, நன்றி தெரிவிக்கிறான்.]மதிவாணன்: நன்றி—பெரியவர்களே மிக்க நன்றி—இந்தப் பெருமை வேழ நாட்டுக்குரியது. என்னை இவ்வாண்டுக் கலை விழாவிலே கலை மன்னனாக்கிய உங்கள் பெருந்தன்மைக்கு என் நன்றி—
ஒருவன்: என்ன பணிவு—என்ன பணிவு—கலை மன்னா—வா—
[சோலை நாட்டுக் கொலுமண்டபம். மதிவாணன், அரசியின் கொலு மண்டபம் அழைத்துச் செல்லப்படுகிறான்—அருகே சென்று வணக்கம் கூறிவிட்டு அரசியைப் பார்க்கிறான்—அரசி, தன் தங்கமாக இருக்கக்கண்டு திடுக்கிடுகிறான்—அவனால் நம்ப முடியவில்லை—ஆச்சரியத்தால் சிலை போல் நின்றுகொண்டு இமை கொட்டாது அரசியைப் பார்க்கிறான். சபையினர் சிறிதளவு அருவருப்படைகின்றனர் இந்தப் போக்கு கண்டு...அரசி முதலிலே ஒரு