59
திலகா: கேட்கத் துணிந்ததே உமக்கு...
வ. மாது: கண்ணே - வேண்டாமடி - இதோ பாரம்மா.
திலகா: என்னம்மா? என்ன?
வ.மாது: குழந்தை என்மக உயிரைப் போக்கிக்கொள்ளப் போரேன்னு ஓடி வருது.
திலகா: ஏன்? சாகத்துணிந்த காரணம்? என்னம்மா தகராறு?
வ.மா: என்ன தகராறு கிளம்பும்!- கலியாண விஷயமாகத்தான்!
இளமங்: (ஆத்திரமாக) கலியாணமாம்! என்னைப் படுகுழியிலே தள்ள ஏற்பாடு செய்துவிட்டுப் பசப்பிப் பேசறியா? (திலகாவிடம்) - அவலட்சணமாம்மா நான், என்னை ஒரு நொண்டிக்குக் கலியாணம் செய்து கொடுக்க?
திலகா: (திடுக்கிட்டு) நொண்டிக்கா? எப்படி அம்மா மனம் இடங்கொடுத்தது ஒரு நொண்டிக்கு இவளைக் கலியாணம் செய்து தர.
வ.மாது: (பயத்துடன்) சொத்துக் கொஞ்சம் இருக்குது, கால் நொண்டியானாலும் மனுஷரு தங்கமானவர் - குணசாலி.
திலகா: (கோபமாக) குணசாலி! நாமோ நொண்டி - நமக்கு ஏன் கலியாணம் - நம்மைக் கலியாணம் செய்து கொண்டா எந்தப் பொண்ணுக்குத்தான் மனம் நிம்மதியாக இருக்கும் அவ புருஷன் நொண்டி - ஒரு கால் கிடையாது.