உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்ஜோதி

நாடக உறுப்பினர்கள்

சந்திரசேகர ஐயர்


வைதீகர்—வயோதிகர்—குலப் பெருமையும்
குடும்ப கௌரவமும் கெடக்கூடாது
என்பதிலே அதிக அக்கறை
கொண்டவர்—கிராமவாசி.

பிச்சுமணி


சந்திரசேகரர் குமாரன்—அருள் குமார்
என்ற பெயருடன் சினிமா நடிகராக
இருக்கிறான்—குலப் பெருமை கெடக்கூடாது
என்ற எண்ணம் கொண்டவன்—நகரில் வாசம்.

சுகுணா


சந்திரசேகரர் மகள்—விதவை—நகரில்
டாக்டராக இருக்கிறாள். ஜாதிக்
கட்டுகள் அர்த்தமற்றவை என்ற
கருத்துடையவள். கொண்ட கருத்தை
உருட்டல் மிரட்டல் கண்டு மாற்றிவிடும்
போக்கு கிடையாது.