காட்சி—15
இடம்:— அழகூர், ஸ்டுடியோ முதலாளி, தனி அறை.
இருப்போர்:— முதலாளி, அருள்குமார்.மு:— அருள்குமார் சார்! ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் — கேட்டதுலே இருந்து திகிலாவே இருக்குது...
அ:— (திகைப்புடன்) என்ன கேள்விப்பட்டிங்க...
மு:— உன் மனசோட இருக்கட்டும்—சர்க்கார்லே ரொம்பக் கண்டிப்பா இருக்கப் போறாங்களாம் இனிமேல் பட—கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கிக் காட்டறாங்க; அதனாலே ஜனங்க கெட்டே போறாங்க... இனி கண்டிப்பாக இருக்கவேணும்...
அ:— (புன் சிரிப்பாக) அதுவா? உங்களுக்கு அது இப்பத்தான் தெரியுமா; எனக்கு முன்னமேயே தெரியுமே. நான் சொன்னா நீங்க எங்கே கேட்கப்போறீங்கன்னு நான் இதுவரை சொல்லாமலிருந்தேன் — சர்க்கார்லே கண்டிப்பாத்தான் இருக்கப்போறான்னு சர். சாம்பசிவ ஐயரோட் மச்சினன். என்னிடம் சொன்னார்... மதம், ஜாதி, பழய ஆச்சாரம், அனுஷ்டானம் இவைகளெல்லாம் பாழாகிவிடுகிறபடியான கதைகளெல்லாம் படமா எடுத்துக் காட்டுவதாலே, ஜனங்களோட ஒழுக்கமே கெட்டுப் போறதுன்னு, சர்க்கார்லே பேசிக்கிறாளாம். யோசிச்சுப் பார்த்தா சர்க்கார் சொல்றது, சரிதானே சார்!
மு:— (முகத்தைச் சுளித்தபடி) என்ன சார், சரி! குடிக்க வேணும், கொலை செய்ய வேணும், கற்பைக் கெடுக்க வேணும், களவாடவேணும், வரி கட்டக்கூடாது. ஜாதித்திமிர் பிடித்தவங்களை சாகடிக்க வேணும், அப்படி இப்படின்னா படம் எடுக்கறோம். சர்க்கார் அப்படிப் படம்