87
ஐ:— (களிப்புடன்) பலே! தங்கவேல் இனி—பிணம்தான் — தீர்ந்தான் பயல்...சுகுணாவைக் கல்யாணம் செய்து கொள்ளப்போற மாப்பிள்ளை...!மடப்பய. மடப்பய! சந்திரசேகர ஐயரோட சங்கதி என்ன தெரியும் அந்தப் பயலுக்கு? சட்டை மாட்டிண்டா போதுமோ... ஒழிச்சுவிட வேண்டும்னு தீர்மானிச்சேனானா, தீர்ந்தது—அவ்வளவுதானே!
காட்சி—21
இடம்:— பொன்னன் வீடு.
இருப்போர்:— பொன்னி, பக்கிரி, பொன்னன்.ப:— பொன்னா? போதுகாலமாச்சே இப்படி ஊர் சுத்திகிட்டு இருக்கறயே, பொன்னிக்கு யாரு துணை... உன் போக்கு பழயபடிதான் இருக்கு இன்னமும்...
பொ:— பக்கிரி, (பழம் கொடுத்து) இந்தா சாப்பீடு...பொன்னி! பொன்னீ? (பொன்னி வர, அவளிடம் ஹார்லிக்ஸ் கொடுத்து) இது ரொம்ம நல்லதாம் — பலம் தருமாம் — சாப்பிடு...பக்கிரி! எப்படி உன் க்ஷேமமெல்லாம்.
ப:— எப்பவும் போலத்தான். அது சரி, என்ன, பழம் பிஸ்கட்டு, ஹார்லிக்ஸ் தடபுடலா இருக்கு — எங்கே வேட்டை
பொ:— அட, ஏதோ ஒரு சான்சு...
ப:— பழயபடி தானே! எவனாவது அக்ரமக்காரன் கூலி கொடுத்திருப்பான். எவனை என்ன பாடுபடுத்திவிட்டு வாரயோ ...இதோ பாரு பொன்னா! அனியாயத்துக்கும் அக்ரமத்-