உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

சினிமாவிலே ஆயிரமாயிரமாச் சம்பளம் — பேப்பர்காரனுங்க, பக்கம் பக்கமா எழுதுவாங்க, பாராட்டி...

பொ:— ஏன்...

ப:— (மார்பைக் காட்டி) எல்லாம் இந்த ‘பாக்யம்’ தான்...! நானும் ‘சான்சு’ கிடைக்கும்னு, காத்துக் காத்துப் பார்த்தேன் — ஒரு மண்ணும் கிடைக்கல்லே—இதுகூட (படத்தைக் காட்டி) எப்படி தெரியுமா...

பொ:— எப்படி...?

ப:— இது ஒரு நல்ல பத்திரிகை— செல்வாக்கு—இதிலே இவ்வளவு நாளா (மார்பைக் காட்டி) அது ஒண்ணு இருந்து கொண்டு, அவளோட போட்டோவா போட்டுகிட்டு இருந்திருக்கு — பிற்பாடு நம்மவங்க நல்லா வாழவேணும், எதிலேயும் முன்னுக்கு வர வேணும்னு பாடுபடற கட்சி ஒண்ணு இருக்கு—திராவிட இயக்கம்னு...

பொ:— எது, எது திராவிட இயக்கமா...அட எழவே, போன மாசம், அவனுங்க கூட்டத்தைக் கல்லை வீசி நான்தான் கலாட்டா செய்து, கலைச்சேன் — நம்ம ஐயரு சொன்னாரு. பொன்னா! இந்தப் பயலுங்க, சாமி இல்லேன்னு பேசறவங்க— புத்திகற்பிக்கணும்னு சரி, சாமின்னு சொல்லி...

ப:— நம்மளவங்களுக்காக பாடுபடுகிறவங்க தலையிலே கல்லெப் போட்டே—

பொ:— எனக்கு என்ன பக்கிரி, தெரியும்—இப்பத்தான் புரியுது... இவங்களும் எதுக்காகப்பா, சாமியே கிடையாதுன்னு பேசறது?

ப:— சாமி கிடையாதுன்னு சொல்லலியே! கடவுள் பேராலே கட்டி இருக்கிற கதைகள் எல்லாம் ஆபாசமா இருக்கு, கடவுள் பேர் சொல்லி கபட நாடகமாடி கொழுத்துப் போகிறாங்க சிலரு—ஜனங்களோ சோத்துக்கே திண்டாட்டப்படுகிறாங்க—இப்படி ஏம்பா நாட்டைக்