உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/உண்டு

விக்கிமூலம் இலிருந்து

கரும்பு இருக்கும் இடத்திலே,
எறும்பு உண்டு மொய்க்கவே.

கண்ணன் தின்னும் பண்டத்தில்,
வெண்ணெய் உண்டு முதலிலே.

தோசை சுட்டால் ‘சுர்’ரென
ஓசை உண்டு கேட்கவே.

மீசை வெள்ளை ஆகியும்,
ஆசை உண்டு வாழவே.

துஷ்ட னான பையனால்,
கஷ்ட முண்டு வீட்டிலே.

தெம்பில் லாத பாட்டிக்கு,
கம்பு உண்டு கையிலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/உண்டு&oldid=1724529" இலிருந்து மீள்விக்கப்பட்டது