மலரும் உள்ளம்-1/வண்டு
Appearance
வண்டு இங்கே பாரடா.
மலரைத் தேடி வருதடா.
உண்டு, உண்டு தேனையே
ஒலிக்கும் பாட்டுக் கேளடா.
- (வண்டு பூவிடம் சொல்லுகிறது.
என்ன சொல்லுகிறது தெரியுமா?)
தேனைத் தந்து பசியினைத்
தீர்க்கும் பூவே, உன்னையே
ஏனோ மனிதர் பறிக்கிறார்?
எளிதில் வாடச் செய்கிறார்.
சேர்த்து வைத்தேன் நீதந்த
தேனை நானும் கூட்டிலே.
பார்த்து விட்டார், அதனையும்
பறித்துக் கொண்டு விரட்டினர்.
இனிக்கும் தேனைச் சேர்த்ததால்
என்னை மனிதர் பிரிக்கிறார்.
மணத்தை வாரி இறைத்ததால்
மலரே உன்னைப் பறிக்கிறார்.