உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சொர்க்கவாசல் அப்படிப்பட்ட வில்லங்கமான-விபரீதக் கருத்துக்கள் கொண்ட காட்சி நிறைந்த கூத்தினை நடத்தி, தன்மானத் தோடு வாழ்ந்த தமிழனைத் தரைமட்டமாக்கி, வைரம் பாய்ந்த நெஞ்சை தைரியமில்லாததாக்கி, எதற்கும். ஏன் என்று கேட்டு வாழ்ந்தவனை, அப்படிக் கேட்பது 'வீண்’ என்று நினைக்கும்படியாகச் செய்த ஒரு காலத்தில் நாம் இல்லை. - அவ்விதம் செய்யப்பட்டு, அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு கட்டத்தில்தான் மாயக்கலையில் வல்ல மன்னன் - நமது அண் ணன், அதே நாடகக் கலையின் வாயிலாகத் தாழ்ந்து கிடந்து தமிழகத்தை உயர்த்தும் பணியை மேற்கொண்டார். எந்த ஒரு நாடகக் கலையின் மூலமாக நாட்டு மக்களின் சொல் - செயல் இரண்டையும் மாறுபடச் செய்தார்களோ, அதே கலையின் வாயிலாக இதே தாயகத்தை தமிழகத்தை மீண்டும் விழிக்க வைக்க 'நாடகம்' சமைக்கத் துவங்கினார். இன்றளவும் உலக அரங்கில் போற்றப்பட்டு வருகின்ற ஷேக்ஸ்பியர், பெர்னார்ட்ஷா போன்ற நாடக மேதைகளின் நாடகங்களில் எல்லாம் மனத்தைத் திருத்திப் பக்குவப்படுத் தும் துளிகளையே பரவலாகக் காண முடியும். ஆனால் அறி வுலக மேதை அண்ணா அவர்கள் தீட்டிய ஒவ்வொரு தாடக் மும் மனித உள்ளங்களைத் திறக்கும் திறவுகோலாகும். நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சமூகப்பற்று போன்ற பல்வேறு துறைகளில் மக்களுக்குப் "பற்று வரும்படியாக நாடகத் துறையில் மறுமலர்ச்சியும், மக்கள் மனத்தில் புத் துணர்ச்சியும், பொதுவாகத் தமிழரங்கில் விழிப்புணர்ச்சியும் .i