உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 85. முர: உனக்கு ஒரு இழவும் தெரியறது இல்லை-வாலி' பரா மன்னர்? வயது ஆகிவிட்டதேல்லோ பணி: எதுக்கு? முர: பொதுவாத்தாம்பா கேக்கறேன். வயோதிகப் பருவம். பணி: வந்திருக்கு-ஆனால் சொல்லப்படாது. முர: வயோதிகமானவர்களை வாலிபமாக்கும் இந்தத் தைலம்! பஞ்ச மூலிகைத் தைலம். பணி: சரி -- இந்தத் தைலத்தாலே, அவருக்கு ஒரு குணமும் தெரியக் காணோமே-என்ன காரணமோ? ஒரு வேளை தேய்க்கத் தேய்க்க, தைலம் உன் உடம்புக்குள்ளே தான் ஊறிப் போகுதோ, என்னவோ? வா...வா... . (வெற்றிவேலன் தைலம் தேய்த்துக் கொள்ள, மேல் சட்டையைக் களைந்துவிட்டு உட்கார்ந் திருக்கிறான். தைலத்தை இலேசாகத் தடவியபடி மன்னனின் உடலைப் பிடித்து விடுகிறான் முர டன். பணியாள், தைலத்தில் கொஞ்சம் உள்ளங் கையில் ஊற்றிக் கொண்டு மன்னர் அறியாமல் தன் காலில் தடவிக் கொள்கிறான். அதைப் பார்த்தபடி அமைச்சர் வருகிறார். பணியாள் விழித்து விட்டு மன்னர் இருக்கும் இடத்தைக் காட்டுகிறான்.) . வெற்றி: இடது காலுக்கு... போதுமடா, வலது பக்கம் இடது காலுக்கு. [முரடன் இடது காலில் தைலம் தடவிப் பிடிக்க, அமைச்சர் அருகே வருகிறார். மன்னன் திரும்பிப் பார்த்து...) வெற்றி: இந்தத் தைலம் வீண் நோக்காடுதான்--ஒரு பலனும் காணோம்.