சொர்க்கவாசல் 147 காட்சி- 72 இடம்: குமாரதேவியின் தனி அறை. இருப் குமாரதேவி, செந்தாமரை, அமைச் சர், படைத்தலைவர், பணிப் பெண். நிலைமை: குமாரதேவி சாய்வு வாகனத்தில் வீற்றிருக்கிறாள். தோழி செந் தாமரை குறும்பாகப் பார்த் துக் கொண்டே பேசுகிறாள். செந்தாமரை: எப்படி தேவி இருக்கிறது ஊர்? குமார திருவிழாக் கோலமடி செந்தாமரை! எங்கும் அழகும் அன்பும் தாண்டவமாடுகின்றன. செந்: ஆடாமல் என்ன? குமார: கேலியா செந்தாமரை! மனதிலே மகிழ்ச்சி துள்ளி விளையாடும்போது, தான் மாறிவிடுகிறது. உலகம் உல்லாச கூடமாகத் [பணிப் பெண் வருகிறாள்.] பணி: அமைச்சரும் - படைத்தலைவரும்! குமார: (ஆச்சரியமடைந்து) வருகிறார்களா! இங்கா? பணி: அனுமதி கோரி நிற்கிறார்கள் அங்கு. குமார: (முகம்மாறி) வரச்சொல், செந்தாமரை! புயல் கிளம்புகிறது. [பணிப்பெண் வெளியேறுகிறாள். படைத்தலை வரும் அமைச்சரும் வருகிறார்கள்...அமரும்படி சைகை காட்டுகிறாள் குமாரி. அமருகிறார்கள் அவர்கள். இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி] குமார கவலையுடன் இருக்கக் காரணம்? படைத் தலைவர் முகம் பயங்கரமாக இருக்கிறது. ஏதாவது பகை மூண்டு விட்டதா?
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/147
Appearance