சொர்க்கவாசல் 221 வெற்றி: உளறாதே! என்ன விஷயத்திலே மனம் பதிந்துவிட்டது? மருத்: குழந்தை கீழே விழுகிறபோது மதிவாணன் பாட்டைப் பாடிக் கொண்டிருந்தது. தடுத்தான் காவலன்: தவறி விழுந்துவிட்டது. அதிலேயிருந்து குழந்தைக்கு மதி வாணன் மேலேயும், அவன் பாட்டின் மேலேயும் நினைவு. வேறு நினைவு எதுவும் கிடையாது. வெற்றி: சதியா செய்கிறீர்கள்? மதிவாணன் பாட்டு தான் மருந்தாம்! மிரட்டுகிறாயா என்ன? என் சுபாவம் தெரி யுமே உனக்கு! என்னிடமா இந்த வேலை எல்லாம்? LOT: LOLDIT...LITO... வெற்றி: (வேதனையுடன்) என்ன செய்வது நான்? அந்தத் துரோகியிடமா மண்டியிட வேண்டும்; என் மகளின் உயிர் அவன் பாட்டிலா ஒட்டிக் கொண்டிருக்கிறது? மருத்து வரே! என்னைச் சித்திரவதை செய்யவேண்டாம்! எங்கு இருக்கும் மூலிகையாக இருப்பினும், சொல்லுங்கள்-- கொண்டு வருகிறேன்.
மருத்: வீண் வேலை! மதிவாணன் சீக்கிரம் வந்தாக வேண்டும்! உள்ளம் வெந்து கிடக்கிறது குழந்தைக்கு... (பாய்ந்து சென்று, மருத்துவரின் கழுத்தை நெறித்து விடுவதுபோல் பிடித்துக் குலுக்கி...) வெற்றி: பாவி! என்னைக் கேலியா செய்கிறாய்? எவனை இந்த நாட்டிலே இருக்கக் கூடாது என்று கட்டளை யிட்டேனோ அவனை வரவழைக்க வேண்டும் என்கிறாயே! எவ்வளவு துணிவு? மருத்: நிலைமை புரியவில்லையா வேந்தே! மரணத் தின் பிடியில் இருக்கிறாள் மரகதம். மதிவாணன்தான் அவ ளைக் காப்பாற்ற முடியும். (அவன் அருகே சென்று அணைத்த படி) வீண் கௌரவம் குறுக்கிடக்கூடாது வேந்தே! குழந் தையைக் கொல்லாதீர்! என்னால் பொறுத்துக் கொண்டி