உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 சொர்க்கவாசல் ருக்க முடியாது! பல கொடுமைகளைச் செய்தீர் இதுவரை யில்! ஆனால் இது எவ்வளவு கொடியவனும் செய்யக்கூசும் பாதகம்! மகளைச் சாகடிக்காதீர் உமது மமதையால்! வேண் டாம்! உலகம் உம்மைச் சும்மா விடாது! (ஆத்திரமாகப் பேசியதால் வைத்தியர். கீழே சாய் கிறார் - வெற்றிவேலன் அவரை விறைக்க விறைக் கப் பார்த்துவிட்டு மீண்டும் ஓடி மரகதமணியைப் பார்க்கிறான். *பாடு மாமா பாடு! ஒரே என்று குழந்தை குளறுகிறது. வேதனை தாங்காமல், வெற்றிவேலன் பணியாளி டம், 'மதிவாணனை அழைத்து வாருங்கள்... என்று கூறிவிட்டு படுக்கை அருகே தலைகளிழ்ந்த வண்ணம் அமருகிறான்.) LITO..." காட்சி -112 இடம்: காடு. -- இருப்: மதிவாணன், மருத்துவர், பூங்கோதை. [மதிவாணனைத் தேடி மருத்துவர் வருகிறார்.) மருத்: மதிவாணா, மறுக்காதே! மரகதமணியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது! வேந்தன் துடிக்கிறான். மதி: (வெறுப்புடன்) கடிக்க வரும் பாம்புகூடத்தான் மருத்துவரே அடிபட்டால் துடிக்கிறது... (தன் இதயத்தைக் காட்டி) இங்கே எவ்வளவு வேதனை குழம்பிக் கொண்டி ருக்கிறது தெரியுமா? மருத்: தெரியுமப்பா! அங்கே அன்புக்கு இடம் உண்டு என்பதும் தெரியும். மதி: என் தாய் சிறையில்! திலகா இருக்குமிடம் தெரி யாது! நான் காட்டில்! அரண்மனையில் உள்ள புலிக்குப் பரிந்து பேச வருகிறீர் நீர்!