உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிங்கிணி ஓசை 127 காதரும் விளைவைக்கொண்டு நிகழ்ச்சியையும் அதற்குக் காரணமான பொருளையும் சிறப்பிக்கிறார். கிங்கிணி ஓசை பகைவரை நடுங்கச் செய்தது; திக்குச் செவிபடும்படி செய்தது; எட்டு மலைகளையும், கனகக்குன்றா கிய மேரு மலையையும் அதிரச் செய்தது. எட்டுவெற் பும்கனகப் பருவரைக் குன்றும் அதிர்ந்தன. அந்த வெற்பு ஒவ்வொன்றிலும் சூரபன்மனுடைய ஆட்கள் இருந்தார்கள். சுரர்கள் வாழும் ஆலயமாக இருந்த மேரு இப்போது அசுராலயமாயிற்று. ஆட்சியை மேற்கொள்கிறவன் முக்கியமான நகரங்களையும் கோட் டைகளையும் கைப்பற்றிக்கொண்டு, அங்கங்கே நம்பிக்கை யுள்ள அதிகாரிகளை வைப்பது வழக்கந்தானே? சூரனும் அப்படியே செய்தான். எங்கே பார்த்தாலும் தன்னுடைய தளபதிகளையே வைத்தான். முருகன் முன் அறிவிப்பு இல்லாமல் தண்டிக்கிறவன் அல்ல. 'நம் அழுகையைக் கேட்டுத் திருந்தாத அசுரர்கள் இந்த ஒலியைக் கேட்டாவது தம் கொடிய செயலிலிருந்து நீங்கட்டும்' என்பது அவன் திருவுள்ளம். அதனால் அசுரர் கள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் பரவித் தன் கிண் கிணியோசை கேட்கும்படி செய்தான். இந்த ஒலி அவர்களை நடுங்கச் செய்தது. அவர்கள் வாழும் இடங்களை அதிரச் செய்தது. அவர்கள் அதைக் கேட்டுத் திருந்தினார்களா? அதுதான் இல்லை. சில நேரம் அந்த அச்சம் இருந்தது. பிறகு பழையபடி தம்முடைய காரியங்களை மேற்கொண்டார்கள். வைராக்கிய வகை நாமும் இந்த நிலையில்தான் இருக்கிறோம். 'இந்த உலகம் நிலையாது; வாழ்க்கை நிலையாது; நாமும் ஒரு நாள் இறந்து படுவோம்; காலன் வந்து நம்மைக் கட்டி இழுத்துப்