உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை சைவத் திருமுறைகளில் ஏழாவது சுந்தரமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளியது. இந்த ஏழு திருமுறைகளும் சேர்ந்து தேவாரம் என்றும்,அடங்கள் முறை என்றும் வழங்கும். சுந்தரர் பாடிய ஏழாந் திருமுறையில் நூறு பதிகங்கள் உள் ளன. அவர் பாடியவை முப்பத்தெண்ணாயிரம் பதிகங்களென் றும். அவற்றில் செல்லால் அழிந்தவை போக எஞ்சியவையே இந்த நூறு என்றும் திருமுறை கண்ட புராணத்தால் அறி கிறோம்.

சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கைலாயத்தில் சிவபெருமா னுடைய பிரதிபிம்பத்தினின்று தோன்றி அப்பெருமானுடைய திருத்தொண்டைப் புரிந்து வரும் ஆலால சுந்தரரின் அவதாரம் என்று பெரிய புராணம் சொல்கிறது. சுந்தரர் என்ற திருநாமம் இந்தப் பழைய நிலையைக் கருதியே வழங்குவது. அவருக்குத் தாய் தந்தையர் வைத்த திருநாமம் ஆரூரன் என்பது. அந்தப் பெயரையே அவர் பெரும்பாலும் தம்முடைய பதிகங்களின் இறுதிப் பாடல்களில் அமைத்திருக்கிறார். "ஆரூரனெம் பெருமாற்காள் அல்லேன்என லாமே." அதுவே ஊரன் என்றும் குறுகி வழங்கும். ஊரன் உரைத்தசொல் மாலைகள் பத்திவை." இறைவன் முதியவர் வேடம் பூண்டு வந்தபோது வன்மை பேசியமையால் அவனே வன்றொண்டன் என்ற திருப் பெயரை வழங்கினான். வன்றொண்ட ருரன் உரைத்ததமிழ்.' இறைவனிடம் அன்பு செய்யும் முறைகள் பல சுந்தரர் சிவபெருமானுடைய தோழராக அன்பு செய்தார் இந்தத் தோழமை நெறியைச் சக மார்க்கம் என்று சொல்வர் திருமுறை கண்ட புராணம், 10.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/4&oldid=1725507" இலிருந்து மீள்விக்கப்பட்டது