உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv இதனால் சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் தம்பிரான் தோழர் என்ற திருப்பெயர் அமைந்தது. எம்பெருமானுக்கும் தமக்கும் உள்ள தோழமை உறவைச் சில இடங்களில் சுந்தரரே சொல்லுகிறார். தோழமை அருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை" "என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடனாகி"

  • தூதனை என்றனைஆள் தோழனை.

ஆதி சைவர் குலத்தில் பிறந்தமையால் நம்பி என்ற பெயர் இவருக்கு உரியதாயிற்று. "நாவலர்கோன் நம்பியூரன் சொன்ன சந்தம்ரிகு தண்டமிழ் மாலை.' இதனால் பிற்காலத்தவர்கள் இவரை ஆளுடைய நம்பி என்று வழங்கலாயினர். ' இறைவனுடைய தோழமை பெற்றதனால் இவர் பாடல் களில் ஏழை நண்பன் ஒருவன் செல்வனாகிய தன் நண்பனோடு பேசும் வகையில் பல இடங்கள் அமைந்திருக்கும். சில சம யங்களில் மிடுக்குடன் இன்னது வேண்டும் என்று கேட்பார்; இன்னும் சில சமயங்களில் மிக்க பணிவுடன் இரப்பார். இறை வனுக்கும் தமக்கும் உள்ள தொடர்பைக் கூறிப் பெருமிதம் கொள்வார்; சில இடங்களில் இறைவனைப் பரிகாசம் செய்வார். இறைவனுடைய பராமுகம் கண்டு சினம் மூண்டு பாடிய பாடல் களும் உண்டு, இவர் பாடல்களில் இவருடைய உணர்ச்சி களோடும் வாழ்க்கையோடும் ஒட்டிய பாடல்களே மிகுதி. • சுந்தரர் தேவாரத்தில் திருத்தொண்டத்தொகை என்ற பதி. கம் இருக்கிறது. சிவனடியார்களாகிய நாயன்மார்களின் பெரு மையை இன்று நாம் எல்லாம் உணர்ந்து பாராட்டி உய்வதற் குரிய வழியைக் காட்டியது அத்திருப்பதிகமே. அது இல்லாவிட் டால் அறுபத்துமூவர் என்ற வரையறை இராது. கம்பியாண் டார் நம்பி. அதனை விரித்துத் திருத்தொண்டர் திருவந்தாதி பாடி னார். அதனைப் பின்னும் விரித்துச் சேக்கிழார் பெரிய புரா ணத்தை அருளினார். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/5&oldid=1725508" இலிருந்து மீள்விக்கப்பட்டது