உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடுநாட்டில் உள்ள திருநாவலூரில் பிறந்தவர். திருவெண்ணெய்நல்லூரில் இறைவனால் ஆட்கொள் ளப் பெற்றவர். சிவபெருமான் இவருக்குத் திருமணம் நிகழ விருந்த சமயத்தில் தடுத்தாட் கொண்டான். பதினெட்டு ஆண்டு கள் நிலவுலகில் இவர் வாழ்ந்தார் என்று ஒரு பழம் பாடல் தெரி விக்கின்றது. இறுதியில் இறைவன். அனுப்பிய வெள்ளை யானை யின்மேல் ஊர்ந்து திருக்கைலாயம் சென்றார். ஆடி மாதம் சுவாதித் திருநாளில் இவர் கைலாயம் சேர்ந்தார் என்பர்.சுந்தரமூர்த்தியார் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவரென்று ஆராய்ச்சியினால் தெரிய வருகிறது.

சுந்தரமூர்த்தி நாயனார் ஒவ்வொரு பதிகத்தின் இறுதிப் பாட் டிலும் தம்முடைய பெயரை இணைத்துப் பாடுவார். இன்னதன் பொருட்டு இப் பதிகம் பாடப் பெற்றது என்ற குறிப்பையும் வைப்பது இவர் வழக்கம். கொல்லை வளம்புறவில் திருக் கோளிலி மேயவனை நல்லவர் தாம்பரவும் திரு நாவன ஊரனவன் நெல்லிட ஆட்கள்வேண்டி நினைந் தேந்தீய பத்தும்வல்லார் அல்லல் களைந்துலமின் அண்டர் வானுல கான்பவரே! என்பது போன்ற இறுதிச் செய்யுட்களில் இதைக் காணலாம். சுந்தரர் தேவாரத்தில் இந்தளம், தக்க ராகம், நட்ட ராகம், கொல்லி, கொல்லிக் கௌவாணம், பழம் பஞ்சுரம், தக்கேசி, காந்தாரம், பியந்தைக் காந்தாரம், காந்தார பஞ்சமம், கட்டபாடை, புறநீர்மை, சீகாமரம், குறிஞ்சி, கவுசிகம், செந் துருத்தி, பஞ்சமம் என்ற பண்களில் அமைந்த பாடல்கள் இருக் கின்றன. பல தலங்களை இவர் பாடியுள்ளார். இவர் பாடிய நூறு பதிகங்களில்,மூப்பதுமில்லை, முடிப்பது கங்கை, நமக்கு அடிக் ளாகிய அடிகள், நம்பியென்ற பதிகம் என்ற நான்கும் பொது வானவை. திருத்தொண்டத்தொகை நாயன்மார்களைப்பற்றியது. திருநாட்டுத்தொகை, ஊர்த்தொகை என்னும் இரண்டும் பல தலங் களைத் தொகுத்துக் கூறும் பதிகங்கள். ஒவ்வொரு பாட்டிலும் இரண்டு தலங்களைப் பாடும் பதிகங்கள் மூன்று உள்ளன. அவை . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/6&oldid=1725509" இலிருந்து மீள்விக்கப்பட்டது