அாளாளன் 3 "உன் பாட்டனார் எழுதி அளித்த ஓலை இருக்கிறது. வெறும் பேச்சுப் பேச வேண்டாம். எனக்குப் பணி செய்யவேண்டும்." அவருடைய வடிவத்தைக் கண்டபோது சுந்தரருடைய உள்ளம் உருகியது. ஆனால் அவர் வார்த்தையைக் கேட்ட போது சினம் மூண்டது. "எங்கே, அந்த ஓலையைக் காட் டும்; பார்க்கலாம்" என்றார். "உனக்கு நான் ஓலை காட்ட வேண்டுமோ? சபையினர் முன் காட்டி உன்னை வேலை செய்யச் செய்கிறேன்" என்று அந்தணர் மிடுக்காகப் பேசினார். அப்போது து நாவலாரூரர் வெகுண்டு வேகமாக அம் முதியவரைப் பற்றச் சென்றார். அவர் மணப் வந்தலுக்குள்ளே ஓட, சுந்தரர் அவரை விரைந்து சென்று பற்றி அவர் கையில் இருந்த ஓலையைப் பிடுங்கி, "அந்த ணர் அடிமை வேலை செய்வதாம்!" என்று அதைக் கிழித்து விட்டார். அது கண்டு அருகில் உள்ளவர்களைப் பார்த்து அந்தணர் முறையிட்டார். அப்போது அயலில் நின்றவர் கள் சுந்தாரை விலக்கி, புதியதாக உலகில் இல்லாத செய்தியைச் சொல்லும் அந்தணரே! நீர் எங்கே இருக் கிறவர்? சொல்லும்" என்று கேட்டார்கள். அதற்கு அவர், நான் இதோ அணிமையில்தான் இருக்கிறேன். வெண்ணெய் நல்லூர்தான் என் இருப் யிடம். அது கிடக்கட்டும் ஐயா; இவன் அக்கிரமமாக என் கையில் இருந்த ஓலையை வாங்கிக் கிழித்து விட்டான். இதுவே இவன் எனக்கு அடிமை என்பதைக் காட்ட வில்லையா? ஓலை இருந்தால் உண்மை தெரிந்துவிடும் என்று அதைக் கிழித்து விட்டான்" என்றார்.
பக்கம்:அருளாளன் 1954.pdf/12
Appearance