அருள்ாளன் அதன் பின், அடிமை கொண்ட ஐயர் ஓலையை எடுத்துக் கொடுக்க ஊர்க்கரணத்தான் வாங்கிப் படிக்கத் தொடங்கினான். பர் என் "திருநாவலூர் ஆதி சைவனாகிய ஆரூரன் எழுதியது. திருவெண்ணெய்நல்லூர்ப் பித்தனுக்கு யானும் னுடைய பரம்பரையில் வருகிறவர்களும் அடிமை. இதற்கு இவ்வோலை எழுதினேன், இது என் எழுத்து.' ' ஓலையிலுள்ள வாசகத்தைக் கேட்டு, அதில் சாட்சிக் கையெழுத்திட்டவர்கள் பெயர்களையும் யாவரும் கேட்ட னர். அப்பால் அந்த எழுத்து. சுந்தரருடைய பாட்டனா ருடையதுதானா என்ற ஆராய்ச்சி பிறந்தது. ஆவணக் களரியிலிருந்து அவர் எழுதிய பழைய ஓலை ஒன்றை வருளித்து ஒப்பு நோக்கினார்கள். எழுத்து இரண்டும் ஒத்திருந்தன. வெண்ணெய்நல்லூர்க் கிழவர் கூறுவது உண்மையே என்று தீர்ப்புச் செய்தனர் அவையிலுள்ள பெரியோர். இந்த நிகழ்ச்சியைக் கண்டு அங்கிருந்த யாவரும் வியப் படைந்தனர். அந்தணர்கள் அவரை நோக்கி, "நீர் இவ்வூர் என்று சொல்கிறீர். இங்கே நீர் இருக்கும் வீடு எது? எப்படி வாழ்க்கை நடத்துகிறீர்?" என்று கேட் டார்கள். "என்னை உங்களுக்குத் தெரியாதா? அப்படியானால் வாருங்கள்; என் இருப்பிடத்தைக் காட்டுகிறேன்" என்று சொல்லிப் புறப்பட்டார் அந்தணர். அவரைத் தொடர்ந்து நம்பி ஆரூரரும் மற்றவர்களும் சென்றார்கள். அவர் திருத் கோயிலுக்குள் சென்று மறைந்தார். ஆரூரர் கோயிலுக்குள் புகுந்து, "எம்பிரான் கோயி லுக்குள் இவர் வந்தது எதற்காக?" என்று சுற்றுமுற்றும் பார்த்தபோது, இறைவன் உமாதேவியாரோடு விடையின்
பக்கம்:அருளாளன் 1954.pdf/14
Appearance