அருளாளன் தெல்லாம் தாய் வருந்துகிறாள். மீட்டும் மீட்டும் அவனை எந்த வழியிலாவது தன்னோடு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நினைவோடு அவள் முயற்சி செய்கிறாள். அவ்வாறே, இறைவன் ஆருயிர்களையெல்லாம் காப் பாற்றவேண்டும் என்று எண்ணுகிறான்; தன்னுடைய அணைக்கவேண்டுமென்று முயல் கருணைக்கரத்தினாலே கிறான். நாம் செய்கிற பக்தியிலேதான் அதிக ஆற்றல் இருக்கிறதென்று நாம் நினைக்கிறோம். அப்படி அன்று. நாம் செய்கிற பக்தியெல்லாம் வெறும் வியாஜ மாத்திரம். 'எப்படியாவது இவன் நம்மை அண்டவேண்டும். இவன் நம் பக்கம் திரும்புகிறானா? என்று ஆண்டவன் பார்த்துக் கொண்டே இருக்கிறான். அவனை நோக்கி நாம் ஓர் அடி எடுத்து வைத்தால் அவன் நூறடி, ஆயிரம் அடி எடுத்து வைத்து வேகமாக வருகிறான்; "அப்பா, வந்தாயா? என்று மிக்க ஆர்வத்தோடு நம்மை அணைந்துகொள்ள வருகிறான். நம்முடைய பக்தியின் வேகத்தைக் காட்டிலும் நம்மை ட்கொள்ள வேண்டும் என்று எம்பெருமானுக்கு உள்ள கருணையின் வேகம் மிகுதியானது. அவனுடைய திரு அவதாரங்களுக்கும், அவன் செய்கின்ற பல திருவிளை யாடல்களுக்கும், அவன் எடுத்துக் கொள்ளுகின்ற உரு வங்களுக்கும் முக்கியமான காரணம், ஆருயிர்களெல்லாம் உய்யவேண்டும் என்ற கருணைதான். அது ஒரு பித்து அல்லவா? குணம் குறி ஒன்றும் இல்லாத பரப்பிரம்மமாகிய கடவுள், எல்லாவிதமான காரியங்களையும், பராக்கிரமங் களையும், அவதூறுகளையும், புகழ்களையும் ஏற்றுக்கொள் வதற்குக் காரணம் ஆருயிர்களை மீட்டும் அருளினால் தனக்கு அடிமையாக்கிக்கொள்ளவேண்டும் என்ற ஒரே ஞாபகந்தான். அதையன்றி வேறு எதையும் நினையாமல் இருக்கிறான். அந்தக் கருணையினாலே பித்தாகித் திரிகிறான்.
பக்கம்:அருளாளன் 1954.pdf/17
Appearance