உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளாளன் 17 உலகிலுள்ள எல்லா அடிமைகளும் தம்முடைய தலைவன் இன்னான் என்பதை உணரும்பொழுது அவன் பால் பக்தி உண்டாகிறது. இறைவனுக்குத் தாம் அடிமை என்ற நினைவு உள்ளத்திலே முறுகி எழுந்தவுடன் அதற்கு ஏற்ற உணர்ச்சியும் அநுபவமும் உண்டா கின்றன. அந்த அநுபவந்தான் இறைவனுடைய அரு ளிலே புகும் அனுபவம் என்று பெரியோர்கள் சொல் கிறார்கள். என்றைக்கு அவனை நன்கு தெரிந்து கொள்கி றோமோ, நம்முடைய நிலை எப்பொழுது நமக்குத் தெளி வாகப் புலனாகிறதோ அப்பொழுது தோன்றுவதுதான் சிவஞானம். றைவனுடைய திருவருளினாலே ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இப்பொழுது சிவ ஞானம் தோன்றிவிட்டது. அப்படிச் சொல்வதைக் காட்டி லும், 'சிவஞானியாக இருந்த அவர் இறைவனுடைய திரு வருளினாலே உலகத்தில் பிறந்தார்; நாம் தடுத்து ஆட் கொள்வோம் என்று அவர் சொல்ல, அதன்படியே இப் பொழுது ஆட்கொள்ளப் பெற்றார்; அப்படிப் பெற்ற சம யத்திலே சிவஞானம் தோன்றியது போன்ற ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தது' என்று சொல்வது பொருந்தும். அந்த ஞானம் எத்தகையது? 'நீ எனக்குத் தலைவன். அல்லது ஆண்டான்; நான் உனக்கு ஆள். எனக்கும் உனக்கும் உள்ள தொடர்பு கொண்டிருக்கின்றது. நான் இந்தத் தொடர்பு மாறாது. . அநாதி காலமாக வந்து அறியாவிட்டாலுங்கூட இந்தத் தொடர்பை நான் உணராவிட்டாலும் நீ நீ உணர்ந்து கொள்வாய். இந்தத் தொடர்பை நான் உணர வேண்டும் என்று எப்பொழுது உன் திருவுள்ளத்தில் தோன்றுகின் றதோ அப்பொழுது வந்து உணர்த்துவாய். அப்படி 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/26&oldid=1725529" இலிருந்து மீள்விக்கப்பட்டது